- Home
- Cinema
- Tamannah Bhatia Hot : ப்பா... கடலே சூடாகிறும் போல..! மாலத்தீவில் மஜா பண்ணும் நடிகை தமன்னாவின் ஹாட் கிளிக்ஸ்
Tamannah Bhatia Hot : ப்பா... கடலே சூடாகிறும் போல..! மாலத்தீவில் மஜா பண்ணும் நடிகை தமன்னாவின் ஹாட் கிளிக்ஸ்
Tamannah Bhatia Hot : கோலிவுட்டில் டல் அடித்து கிடக்கும் தனது மார்க்கெட்டை மீண்டும் பழைய பார்முக்கு கொண்டு வரத் தான் நடிகை தமன்னா மாலத்தீவுக்கு விசிட் அடித்துள்ளதாக பேச்சு அடிபடுகிறது.

தமிழில் கடந்த 2006-ம் ஆண்டு வெளியான கேடி படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் தமன்னா. இப்படத்தில் நடிக்கும்போது அவருக்கு வயது 16 தானாம்.
இதையடுத்து வியாபாரி, கல்லூரி, நேற்று இன்று நாளை என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார் தமன்னா.
இவருக்கு திருப்புமுனையை ஏற்படுத்திய படம் படிக்காதவன். இப்படத்துக்கு பின்னர் தான் நடிகை தமன்னா கமர்ஷியல் படங்களை தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்தார்.
இதன் பலனாக அவருக்கு விஜய்யின் சுரா, அஜித்தின் வீரம், கார்த்தியுடன் பையா, சிறுத்தை, சூர்யாவுடன் அயன் என அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்ததன் மூலம் முன்னணி நடிகையாக உயர்ந்தார்.
இதுதவிர தெலுங்கு, இந்தி போன்ற பிற மொழிகளிலும் நடிகை தமன்னாவுக்கு செம்ம டிமாண்ட் உருவானதால் அங்கும் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து பான் இந்தியா நடிகையாக உயர்ந்தார் தமன்னா.
தற்போது தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வரும் தமன்னாவுக்கு தமிழில் ஒரு படம் கூட கைவசம் இல்லை. இதனால் பட வாய்ப்புகளை பிடிக்க கவர்ச்சியில் அதகளம் செய்து வருகிறார் தமன்னா.
தற்போது மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ள தமன்னா, அங்கு தாராள கவர்ச்சி காட்டி புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்து அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.
கோலிவுட்டில் டல் அடித்து கிடக்கும் தனது மார்க்கெட்டை மீண்டும் பழைய பார்முக்கு கொண்டு வரத் தான் இந்த மாலத்தீவு விஜயம் என பேச்சு அடிபடுகிறது.
இதையும் படியுங்கள்... pugazh : குக் வித் கோமாளி புகழுக்கு கிடைத்த ஜாக்பாட் வாய்ப்பு.. யுவன் இசையமைக்கும் படத்தின் மூலம் ஹீரோவாகிறார்