54 வயது வரை திருமணம் செய்து கொள்ளாதது ஏன்? தளபதி ஹீரோயின் கொடுத்த விளக்கம்!
54 வயதாகியும் ஏன் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை என்பதற்கான காரணத்தை ரஜினியின் தளபதி பட நடிகையான ஷோபனா கூறி உள்ளார்.

குழந்தை நட்சத்திரமாக நடித்தவர்
குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானவர்களில் நடிகை ஷோபனாவும் ஒருவர். மங்கள நாயகி படம் தான் இவர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான முதல் படம். கமல் ஹாசன் நடித்த எனக்குள் ஒருவன் படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகமானார். சட்டத்தின் திறப்பு விழா, இது நம்ம ஆளு, பாட்டுக்கு ஒரு தலைவன், சிவா, பொன்மன செல்வன், வாத்தியார் வீட்டு பிள்ளை, எங்கிட்ட மோதாதே, மல்லு வேட்டி மைனர், தளபதி, போடா போடி, கோச்சடையான் என்று பல படங்களில் நடித்தார்.
முன்னணி நடிகர்களுக்கு ஜோடி
தமிழ் சினிமாவில் கமல் ஹாசன், விஜயகாந்த், ரஜினிகாந்த் ஆகியோருடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். இதில், இது நம்ம ஆளு, பாட்டுக்கு ஒரு தலைவன், பொன்மன செல்வன், தளபதி ஆகிய படங்கள் ஷோபனாவுக்கு முன்னணி நடிகைக்கான அந்தஸ்தை பெற்று தந்தது.
ஏ பி ஜே அப்துல் கலால் கையால் பத்ம ஸ்ரீ விருது:
கடந்த 2006 ஆம் ஆண்டு மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ பி ஜே அப்துல் கலால் கையால் பத்ம ஸ்ரீ விருது வென்ற ஷோபனாவிற்கு சில தினங்களுக்கு முன்பு மத்திய அரசு பத்மபூஷ்ண விருது அறிவித்தது அனைவரும் அறிந்தது தான். இதற்காக தென்னிந்திய திரையுலகை சேர்ந்த பலர் இவருக்கு தொடர்ந்து வாழ்த்து கூறி வந்தனர்.
200க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார்:
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, ஆங்கிலம் , கன்னடம் ஆகிய மொழிகளில் கிட்டத்தட்ட 200க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். கடந்த ஆண்டு, பிரபாஸ் நடிப்பில் வெளியான கல்கி 2898 AD திரைப்படத்திலும், ஷோபனா முக்கிய ரோலில் நடித்திருந்தார். பாரத நாட்டிய பள்ளி ஒன்றை நடத்தி வரும், ஷோபனா, இதில் பலருக்கு இலவசமாகவும் பாரத நாட்டியம் கற்று கொடுத்து வருகிறார்.
54-வயது வரை திருமணம் செய்யாதது ஏன்?
54 வயதாகியும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வரும் இவர், ஏன் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை என்பதை முதல் முறையாக பேட்டி ஒன்றில் கூறி உள்ளார். அந்த பேட்டியில், திருமணம் செய்து கொள்ள விருப்பமில்லை. திருமணத்தில் நம்பிக்கையும் இல்லை. இப்படியே இருக்கும் வாழ்க்கை தான் எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.
பெண் குழந்தைக்கு தாய்:
அவ்வபோது திரைப்படங்களில் தலைகாட்டி வரும் ஷோபனா தனது பரத கலையில் சிறந்து விளங்கி வருகிறார். கடந்த சில வருடங்களுக்கு முன் இவரது திருமண தகவல் ஒன்று வெளியான போதிலும், பின்னர் அந்த திருமணத்தையும் நிராகரித்து விட்டதாக கூறப்படுகிறது. பெண் குழந்தை ஒன்றை ஷோபனா தற்போது தத்தெடுத்து வளர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.