உச்ச கட்ட ஆபாச கேள்வி... நெட்டிசன் வழியிலேயே பளார் பதிலடி கொடுத்த ஷாலு ஷம்மு..!
கவர்ச்சி நடிகை ஷாலு ஷம்முவிடம், அந்தரங்கமான விஷயங்களை நெட்டிசன் ஒருவர் கேட்ட, பளார் பதிலடி கொடுத்துள்ளார்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் "வருத்தப்படாத வாலிபர் சங்கம்". அந்த படத்தில் சிவகார்த்திகேயன், சூரி காமெடி கூட்டணி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
அதில் சூரிக்கு ஜோடியாக ஷாலு ஷம்மு நடித்திருந்தார். அதன் பிறகு தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், சகலகலா வல்லவன் உள்ளிட்ட படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்தார். "இருட்டு அறையில் முரட்டு குத்து" படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்திருந்தார்.
தற்போது துணை நடிகையில் இருந்து நடிகை அளவிற்கு புரோமோட் ஆனாலும் கவர்ச்சிக்கு தடை போடாமல் இன்ஸ்டாகிராமில் தனது அதிரிபுதிரி கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் ஷாலு ஷம்மு.
மேலும் சோசியல் மீடியாவில் எப்போதும் ஆக்ட்டிவாக இருக்கும் இவர், ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் கேள்விக்கு பதிலளிப்பதையும் வழக்கமாக வைத்துள்ளார்.
அந்த வகையில் சமீபத்தில் நடந்த கலந்துரையாடல் குறித்த, சில ஸ்கிரீன் ஷாட்டுகளை, சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.
சினிமா துறையில் அட்ஜெஸ்ட்மென்ட் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, ஒவ்வொருவரும் அவர்கள் தேர்வு செய்த வழிகளின் படி செல்கிறார்கள், யாரையும் யாரும் கட்டுப்படுத்துவது இல்லை என பதிலளித்துள்ளார்.
ஷாலு ஷம்முவின் முதல் சம்பளம் குறித்து எழுபட்ட கேள்விக்கு... 800 ரூபாய் வாங்கியதாகவும், சென்னை டிரேட் சென்டரில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றதற்கு கொடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
திருமணம் குறித்து முடிவு எடுத்துவெடுத்து செய்துவிட்டீர்களா என எழுப்பப்பட்ட கேள்விக்கு? வீட்டில் மாப்பிள்ளை பார்த்து வருவதாக கூறியுள்ளார்.
எந்த ஒரு பேக் ரவுண்டு இல்லாத ஒரு சாதாரண பையனை திருமணம் செய்து கொள்வீர்களா என நெட்டிசன் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, உண்மையான காதலுடனும், இதயத்துடனும் என்னை விரும்பினால் கண்டிப்பாக அவரை ஏற்றுக்கொள்வேன் என தெரிவித்துள்ளார்.
இப்படி டீசென்ட் கேள்விகளுக்கு மத்தியில் ஒருவர், ஷாலு ஷம்முவிடம் அந்தரங்கமான விஷயம் குறித்து கேட்க... கடுப்பான அவர் அவரது பாணியிலேயே பதிலளித்துள்ளார்.