- Home
- Cinema
- Puneeth Rajkumar Death: வேதனையை விவரிக்க வார்த்தை இல்லை... புனீத் ராஜ்குமார் மறைவால் கலங்கிய சாயீஷா!!
Puneeth Rajkumar Death: வேதனையை விவரிக்க வார்த்தை இல்லை... புனீத் ராஜ்குமார் மறைவால் கலங்கிய சாயீஷா!!
சாண்டில்வுட் நடிகர் புனீத் ராஜ்குமார் (Puneeth Rajkumar) நேற்று மாரடைப்பால் காலமானார். கன்னட திரையுலகில் அனைவரின் அபிமான நடிகரான இவரது மறைவுக்கு கர்நாடகம் இரங்கல் தெரிவித்து வருகிறது. இந்நிலையில் இவருடன் கடைசியாக வெளியான படத்தில் நடித்திருந்த சாயீஷா (Sayyeshaa)இவரது மறைவுக்கு வேதனையோடு இரங்கல் தெரிவித்துள்ளார்.

புனித் ராஜ் குமார் நடிப்பில் இந்த ஆண்டு கடைசியாக வெளியான திரைப்படம் 'யுவரத்னா' என்கிற படத்தில் நடித்திருந்தார். இவருக்கு ஜோடியாக நடிகை சாயீஷா நடித்திருந்தார்.
இந்நிலையில் புனித் ராஜ்குமாரின் திடீர் மரணம் குறித்து அறிந்த சாயீஷா எமோஷ்னல் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது, புனீத் ராஜ்குமார் எனது நண்பர், என்குடும்பத்தில் ஒருவர், நான் அனுபவிக்கும் வேதனையை விவரிக்க என்னிடம் வார்த்தைகள் இல்லை. இது ஈடு செய்யமுடியாத இழப்பு. அவருடைய மனைவி அஸ்வினி அக்கா மற்றும் மகள்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள், என கூறியுள்ளார்.
மேலும் அவர் மில்லியன் கணக்கான ரசிகர்கள் மற்றும் நண்பர்கள் மனதில் வாழ்ந்து வருகிறார். #RIP சார்! உங்களுடன் திரைப்படங்களில் நடித்ததை நினைத்து பெருமைப்படுவதாகவும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
46 வயதே ஆகும் புனீத் ராஜ் குமார், நேற்று தனது வீட்டில் உள்ள ஜிம்மில் உடல் பயிற்சி செய்து கொண்டிருந்தபோது நெஞ்சு வலியால் சுருண்டு விழுந்தார்.
பின்னர் பெங்களூருவில் உள்ள விக்ரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் எதிர்பாராத விதமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.