MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ரூ.1,148 கோடி வசூல் செய்த பிளாக்பஸ்டர் படத்தை ரிஜெக்ட் பண்ண சமந்தா! ஏன் தெரியுமா?

ரூ.1,148 கோடி வசூல் செய்த பிளாக்பஸ்டர் படத்தை ரிஜெக்ட் பண்ண சமந்தா! ஏன் தெரியுமா?

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா ஒரு பிளாக்பஸ்டர் படத்தை நிராகரித்தார். அந்த படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.1100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. 

2 Min read
Author : Ramya s
Published : Nov 14 2024, 07:33 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Actress Samantha

Actress Samantha

தென்னிந்தியாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகளில் நடிகை சமந்தாவும் ஒருவர். தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் வெற்றிகரமான நடிகையாக சமந்தா வலம் வருகிறார். விண்ணை தாண்டி வருவாயா படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான அவர் தொடர்ந்து தமிழ், தெலுங்கில் பிசியான நடிகையாக மாறினார்.

நான் ஈ, கத்தி, தெறி, மெர்சல், நீதானே என் வசந்தம், இரும்புத்திரை பல ஹிட் படங்களில் நடித்த சமந்தா தெலுங்கிலும் பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். ஈகா, ரங்கஸ்தலம், ஜனதா கேரேஜ், மனம் போன்ற படங்களை உதாரணமாக சொல்லலாம். சமந்தா நடிப்பில் கடைசியாக குஷி படம் வெளியானது. எனினும் இந்த படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.

24
Actress Samantha

Actress Samantha

மேலும் சமந்தாவின் ஹனி பனி சிட்டாடல் வெப் சீரிஸ் கடந்த 6-ம் தேதி வெளியானது. இந்த வெப் சீரிஸுக்கும் கலவையான விமர்சனங்களே கிடைத்தது.

ராஜ் & டிகே இயக்கி உள்ள இந்த வெப் சீரிஸ் ரிச்சர்ட் மேடன் மற்றும் பிரியங்கா சோப்ரா நடித்துள்ள ரூசோ பிரதர்ஸ் இயக்கத்தில் வெளியான சிட்டாடல் வெப் சீரிஸின் இந்திய பதிப்பாகும். ஸ்பை ஆக்ஷன் வெப் சீரிஸ் நவம்பர் 6, 2024 அன்று அமேசான் பிரைம் வீடியோவில் வெளியிடப்பட்டது.

34
Actress Samantha

Actress Samantha

ஆனால் நடிகை சமந்தா ஒரு பிளாக்பஸ்டர் ஹிட் படத்தை நிராகரித்தார் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம். உண்மை தான். தமிழ் சினிமாவின் வெற்றிகரமான இயக்குனராக வலம் வந்த அட்லீ பாலிவுட்டில் இயக்குனராக அறிமுகமான படம் ஜவான். இந்த படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிக்க வைக்க முதலில் சமந்தாவை தான் அட்லீ அணுகினாராம். ஆனால், சில தனிப்பட்ட காரணங்களால் சமந்தா அந்த படத்தை நிராகரித்து விட்டார் என்று கூறப்படுகிறது.

44
Actress Samantha

Actress Samantha

அதன்பின்னர் ஜவான் படத்தில் நயன்தாரா நடித்தார். ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக உருவான இந்த படத்தின் மூலம் நயன்தாரா பாலிவுட்டில் அறிமுகமானார். ஜவான் படம் மிகப்பெரிய பிளாக்பஸ்டராக மாறியது., பாக்ஸ் ஆபிஸில் ரூ. 1,148 கோடி வசூல் செய்தது. 2023-ம் ஆண்டின் அதிக வசூல் செய்த இந்திய படங்களில் ஒன்றாகவும் ஜவான் மாறியது.

எனினும் அட்லீயின் தெறி, மெர்சல் ஆகிய படங்களில் சமந்தா நடித்திருந்தார். இந்த இரு படங்களில் பாக்ஸ் ஆபீஸில் வெற்றி படங்களாக அமைந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

RS
Ramya s
விஷுவல் கம்யூனிகேஷனில் இளங்கலை பட்டம் பெற்றுள்ள இவர் 2011 முதல் செய்தி ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். பல முன்னணி செய்தி சேனல்கள் மற்றும் டிஜிட்டல் செய்தி தளங்களில் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உள்ளது. தற்போது ஏசியா நெட் தமிழ் செய்தி இணையதளத்தில் மூத்த துணை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். லைஃப்ஸ்டைல், வணிகம், வேலைவாய்ப்பு, சினிமா ஆகிய தலைப்புகளில் மிகுந்த ஆர்வம் இருக்கும் இவர் வாசகர்களை ஈர்க்கும் வகையில் செய்திகளை எழுதி வருகிறார்.
தமிழ் சினிமா
Latest Videos
Recommended Stories
Recommended image1
ஆதி குணசேகரனின் பிளானை சல்லி சல்லியாய் நொறுக்கிய விசாலாட்சி! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் அதிரடி ட்விஸ்ட்
Recommended image2
தந்தையின் பெயரை நீக்கினாரா ஜேசன் சஞ்சய்? 'சிக்மா' படத்தின் டைட்டில் கார்டில் அதிரடி மாற்றம்! வைரலாகும் பின்னணி!
Recommended image3
சிவாங்கியின் லேட்டஸ்ட் க்ரஷ் இவர்தானா? மேடையிலேயே ஓப்பனாக சொன்ன 'குக் வித் கோமாளி' பிரபலம் - ரசிகர்கள் கிண்டல்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved