Samantha Dating : லேட் நைட்டில் டேட்டிங் சென்ற சமந்தா... அதுவும் யார் கூட தெரியுமா?
Actress Samantha Dating : யசோதா படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதன் ஷூட்டிங் இடைவேளையில் நடிகை சமந்தா டேட்டிங் சென்றுள்ளார்.
நடிகர் நாகசைதன்யாவை கடந்தாண்டு விவாகரத்து செய்த நடிகை சமந்தா, அதன்பின் சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். அதன்படி அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகி வரும் இவர், தற்போது கோலிவுட், டோலிவுட், பாலிவுட் என பல்வேறு திரையுலகில் பிசியான நடிகையாக வலம் வருகிறார்.
நடிகை சமந்தா கைவசம் குஷி, யசோதா, சகுந்தலம் ஆகிய படங்கள் உள்ளன. இதில் சகுந்தலம் படம் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இப்படத்தை குணசேகரன் என்பவர் இயக்கி உள்ளார். இப்படத்தில் நடிகை சமந்தாவுக்கு ஜோடியாக மலையாள நடிகர் தேவ் மோகன் நடித்துள்ளார். இது சரித்திர கதையம்சம் கொண்ட படமாகும்.
அதேபோல் சமந்தா கைவசம் உள்ள மற்றொரு படமான குஷியை ஷிவா நிர்வாணா இயக்குகிறார். இப்படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் சமந்தா. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு அண்மையில் காஷ்மீரில் நடந்து முடிந்தது. இப்படம் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 23-ந் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
தற்போது நடிகை சமந்தா யசோதா என்கிற படத்தில் நடித்து வருகிறார். ஹரி ஷங்கர் மற்றும் ஹரிஷ் நாராயணன் இயக்கி வரும் இப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 12-ந் தேதி ரிலீசாக உள்ளது. இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதன் ஷூட்டிங் இடைவேளையில் நடிகை சமந்தா டேட்டிங் சென்றுள்ளார்.
அவர் தனது நெருங்கிய நண்பர்களான பிரீதம் ஜுகல்கர் மற்றும் சாதனா சிங் ஆகியோருடன் லேட் நைட்டில் டேட்டிங் சென்றதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அவர்களுடன் கவர்ச்சி உடையில் நடிகை சமந்தா போஸ் கொடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படியுங்கள்... மணிரத்னத்தின் ரோஜா படம் பார்த்து என்னை செருப்பால் அடித்துக்கொண்டேன் - பகீர் கிளப்பிய பிரபல நடிகை