மணிரத்னத்தின் ரோஜா படம் பார்த்து என்னை செருப்பால் அடித்துக்கொண்டேன் - பகீர் கிளப்பிய பிரபல நடிகை

Aishwarya Bhaskaran : ரோஜா படத்தில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பை மிஸ் செய்தது குறித்து பிரபல நடிகை தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார். 
 

Actress Aishwarya Bhaskaran feels sad about missing roja movie chance

மணிரத்னம் இயக்கிய ரோஜா திரைப்படம் கடந்த 1992-ம் ஆண்டு ரிலீசாக மாபெரும் வெற்றியை ருசித்தது. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இப்படத்தின் மூலம் தான் சினிமாவுக்கு அறிமுகமானார். அரவிந்த் சாமி நாயகனாக நடித்திருந்த இப்படத்தில் அவருக்கு ஜோடியாக மதுபாலா நடித்திருந்தார். இவர்கள் இருவரது கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆனது படத்துக்கு பலமாக அமைந்தது.

அதுமட்டுமின்றி இப்படத்தின் பாடல்களும் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்தன. இப்படத்தின் பாடல்கள் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றன. மணிரத்னத்தின் இயக்கம், ஏ.ஆர்.ரகுமானின் இசை, அரவிந்த் சாமியின் நடிப்பு என அனைவரும் சிறப்பாக பங்காற்றியதால் இப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

இப்படத்தில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பை மிஸ் செய்தது குறித்து பிரபல நடிகை தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார். இயக்குனர் மணிரத்னம் முதல் இப்படத்தில் ஹீரோயினாக நடிக்க நடிகை லட்சுமியின் மகள் ஐஸ்வர்யாவை தான் அணுகினாராம். ஆனால் அவர் வேறொரு தெலுங்கு படத்தில் நடிக்க கமிட் ஆகி இருந்ததால் ரோஜா படத்தில் நடிக்க தேதி ஒதுக்க முடியவில்லையாம்.

Actress Aishwarya Bhaskaran feels sad about missing roja movie chance

இதையடுத்து தான் நடிகை மதுபாலாவை ஹீரோயினாக நடிக்க வைத்துள்ளார் மணிரத்னம். படமும் ஹிட்டாகி விட்டது. இதுகுறித்து நடிகை ஐஸ்வர்யா சமீபத்திய பேட்டியில் கூறியதாவது: ரோஜா படத்தில் நடிக்க தேதி இல்லை எனக் கூறிவிட்டு தெலுங்கு படத்தில் நடித்தேன். கடைசியில் அந்த தெலுங்கு படம் டிராப் ஆனது. அதேசமயம் ரோஜா படத்தை தியேட்டரில் பார்த்தபோது என்னை நானே செருப்பால் அடித்துக்கொண்டேன் என ஐஸ்வர்யா கூறி உள்ளார்.

இதையும் படியுங்கள்... Prabhas : லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க மறுத்த பிரபாஸ்... என்ன காரணம் தெரியுமா?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios