நடிகை சமந்தாவை விட அவர் 2-வது கணவர் ராஜ் நிடிமோரு இத்தனை வயது மூத்தவரா?
நடிகை சமந்தா, இயக்குநர் ராஜ் நிடிமோருவை இரண்டாவது திருமணம் செய்துகொண்டதாக கூறப்படும் நிலையில், அவர்கள் இருவருக்கும் இடையேயான வயது வித்தியாசம் பற்றி இதில் காணலாம்.

Age Difference Between Samantha and Raj Nidimoru
சினிமா வட்டாரங்களில் தற்போது பரவி வரும் மிகப்பெரிய பிரேக்கிங் நியூஸ், நடிகை சமந்தா ரூத் பிரபுவின் இரண்டாவது திருமணம் குறித்த செய்திதான். 'தி ஃபேமிலி மேன்' புகழ் இயக்குனர் ராஜ் நிடிமோரு மற்றும் சமந்தா காதல் உறவில் இருப்பதாக கடந்த சில மாதங்களாக கிசுகிசுக்கப்பட்டு வந்தது. தற்போது இந்த செய்தி அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது; இந்த ஜோடி ரகசியமாக திருமணம் செய்துகொண்டதாக சமூக வலைதளங்களில் செய்தி காட்டுத்தீயாக பரவி வருகிறது.
சமந்தா கல்யாணம்
இன்று, அதாவது டிசம்பர் 01, 2025 அன்று இந்த ஜோடி திருமண பந்தத்தில் இணைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆடம்பரத் திருமணத்திற்குப் பதிலாக, நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் எளிமையாகத் திருமணம் செய்துகொண்டுள்ளனர். இவர்களது திருமணத்திற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இடமும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆன்மீகத்தில் அதிக நாட்டம் கொண்ட சமந்தா, கோயம்புத்தூரில் உள்ள புகழ்பெற்ற 'ஈஷா யோகா மையத்தில்' திருமணம் செய்துகொண்டுள்ளார். ஆனால், இதுகுறித்து சமந்தாவோ அல்லது ராஜோ இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை; திருமண அழைப்பிதழும் வெளியாகவில்லை.
வயது வித்தியாசம்
நடிகை சமந்தாவுக்கும், ராஜ் நிடிமோருவுக்கும் இடையே திருமணம் ஆன தகவல் ஒருபுறம் பரவி வர, மறுபுறம் அவர்களைப் பற்றி பலரும் அறிந்திடாத தகவல்கள் சிலவும் வெளியான வண்ணம் உள்ளன. அதில் ஒன்று தான் இவர்கள் இருவருக்கும் இடையேயான வயது வித்தியாசம். அதன்படி சமந்தாவை விட ராஜ் நிடிமோரு தான் மூத்தவர். நடிகை சமந்தாவுக்கு தற்போது 38 வயது தான் ஆகிறது. ஆனால் ராஜ் நிடிமோருவுக்கு தற்போது 46 வயது ஆகிறது. இருவருக்கும் இடையே 8 வயது வித்தியாசம்.
சினிமாவிலும் பிசியான ஜோடி
தனிப்பட்ட வாழ்க்கையைத் தவிர, சமந்தாவும் ராஜும் தொழில் ரீதியாகவும் இணைந்து பணியாற்றி வருகின்றனர். சமீபத்தில் நடந்த சமந்தாவின் பிராண்ட் வெளியீட்டு விழாவில் ராஜும் சமந்தாவும் ஒருவரையொருவர் அணைத்த புகைப்படம் வைரலானது. இதைப் பார்த்த ரசிகர்கள், இருவரும் தங்கள் உறவை "இன்ஸ்டா அஃபிஷியல்" செய்துவிட்டதாகப் பேசிக்கொண்டனர். மேலும், நந்தினி ரெட்டி இயக்கத்தில் வரவிருக்கும் தெலுங்கு ஆக்சன் டிராமா படமான 'மா இன்டி பங்காரம்' படத்தை இருவரும் இணைந்து தயாரிக்கின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

