கிளாமர் காட்டியும் வேலைக்கு ஆகல... பட வாய்ப்பு கிடைக்காத விரக்தியில் நடிகை சாக்ஷி எடுத்த அதிரடி முடிவு
Sakshi Agarwal : பட வாய்ப்புகளைப் பிடிக்க கிளாமர் ரூட் ஒர்க் அவுட் ஆகாததால், நடிகை சாக்ஷி அகர்வால் அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.
அட்லீ இயக்கிய ராஜா ராணி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமானவர் சாக்ஷி. இதையடுத்து ரஜினியின் காலா, அஜித்தின் விஸ்வாசம் போன்ற படங்களில் நடித்த சாக்ஷி, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்நிகழ்ச்சி மூலம் அவருக்கு ஏராளமான ரசிகர்களும் கிடைத்தனர்.
இதையடுத்து பல்வேறு படங்களில் கமிட் ஆனார் சாக்ஷி. அவர் நடித்த படங்கள் அனைத்தும் முடங்கிக் கிடப்பதால், அவருக்கு மேற்கொண்டு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதையடுத்து இன்ஸ்டாகிராமில் படுகவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு கிளாமர் ரோலிலும் நடிக்க ரெடி என சூசகமாக தெரிவித்திருந்தார். இதன்மூலம் பட வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்த்தார்.
ஆனால் அவரது முயற்சி அனைத்தும் தோல்வியில் முடிந்தது. கிளாமர் ரூட் ஒர்க் அவுட் ஆகாததால், தற்போது அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளார் சாக்ஷி. அதன்படி அவர் தற்போது சீரியலில் நடிக்க சென்றுள்ளார். கண்ணான கண்ணே சீரியலில் அவர் கெஸ்ட் ரோலில் நடித்து வருகிறார். ஏற்கனவே அந்த சீரியலில் நடிகை இனியா கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகை சாக்ஷி அகர்வாலின் இந்த அதிரடி முடிவு அவருக்கு கைகொடுக்குமா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும். அவர் நடித்த எபிசோடு வருகிற திங்கட்கிழமை முதல் ஒளிபரப்பாக உள்ளதாக அறிவித்துள்ளனர்.
இதையும் படியுங்கள்... டைட் உடையில் ஸ்டரக்சரை நச்சுனு காட்டி... கவர்ச்சியில் அதகளம் செய்யும் திவ்ய பாரதி - வைரலாகும் கிளாமர் கிளிக்ஸ்