MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • சாய் பல்லவி வீட்டில் நடந்த விசேஷம்... துளியும் மேக்கப் இன்றி தங்கையுடன் எடுத்துக் கொண்ட க்யூட் போட்டோஸ்!

சாய் பல்லவி வீட்டில் நடந்த விசேஷம்... துளியும் மேக்கப் இன்றி தங்கையுடன் எடுத்துக் கொண்ட க்யூட் போட்டோஸ்!

நடிகை சாய் பல்லவி வீட்டில் நடந்த விசேஷத்தில் அவர் சிம்பிள் லுக்கில் எடுத்துக் கொண்ட போட்டோஸ் வைரலாகி வருகிறது.

1 Min read
Author : Kanimozhi Pannerselvam
Published : Aug 02 2021, 07:29 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

2015ம் ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் மலையாள திரைப்படம் "பிரேமம்". இந்தப்படம் மலையாளத்தைக் கடந்து தமிழ் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது. "பிரேமம்" படத்தில் மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் தொடங்கிய சாய் பல்லவியின் திரைப்பயணம் தற்போது வரை வெற்றிகரமாக சென்றுகொண்டிருக்கிறது. 

27

ஒரே ஒரு படத்தில் ரசிகர்களின் மனதில் இடம் பிடிப்பது எல்லாம் அனைவருக்கும் சாத்தியமாகாது. ஆனால் சாய் பல்லவி தெலுங்கு, தமிழ், மலையாளம் என 3 மாநில ரசிகர்களின் மனதையும் ஒரே படத்தில் கொக்கிப் போட்டு கவர்ந்திழுத்தார். 

37
sai pallavi

sai pallavi

தமிழில் சாய் பல்லவி வரவுக்காக ரசிகர்கள் காத்திருந்தனர். மாரி 2 படத்தில் தனுஷுடன் சேர்ந்து சாய் பல்லவி ரவுடி பேபி பாடலுக்கு போட்ட ஆட்டம் பட்டி, தொட்டி எல்லாம் தாண்டி ஒட்டுமொத்த தமிழ்நாட்டையே அதிர வைத்தது. அதன் பின்னர் சூர்யாவுடன் என்.ஜி.கே.படத்தில் நடித்தார். 

47
sai pallavi

sai pallavi

தெலுங்கு  பக்கம் போன சாய் பல்லவி ராணாவுடன் விராட பருவம், நாக சைதன்யாவுடன் லவ் ஸ்டோரி, பவன் கல்யாணுடன் ஒரு படம் என நடித்து வருகிறார். தெலுங்கில் பிசியாக வலம் வரும் சாய் பல்லவி மீண்டும் தமிழில் நடிக்க வர உள்ளதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின. 

57
sai pallavi

sai pallavi

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்காக ரசிகர்கள் காத்துகிடந்த நிலையில், சாய் பல்லவி வீட்டில் சத்தமே இல்லாமல் விசேஷம் ஒன்று நடந்து முடிந்திருக்கிறது. இதையடுத்து குடும்பத்தினருடன் சாய் பல்லவி எடுத்துக் கொண்ட போட்டோஸ் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

67
sai pallavi

sai pallavi

சாய் பல்லவி தனது தாத்தாவுடைய 85வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். தாத்தா, பாட்டி மற்றும் தங்கையுடன் சாய் பல்லவி எடுத்துக் கொண்ட க்யூட் போட்டோஸ் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது. 

77
sai pallavi

sai pallavi

சாதாரண புடவை, தலையில் மல்லிகைப் பூவுடன் துளியும் மேக்கப் இல்லாமல் பக்கத்து வீட்டு பெண் போல அழகாக இருக்கும் சாய் பல்லவியின் போட்டோஸ் லைக்குகளை குவித்து வருகிறது. குறிப்பாக தங்கையை கட்டி அணைத்தபடி சாய் பல்லவி கொடுத்துள்ள ஒற்றை போஸ் ரசிகர்களை குதூகலத்தில் ஆழ்த்தியுள்ளது. 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanimozhi Pannerselvam

Latest Videos
Recommended Stories
Recommended image1
உனக்கு சாப்பாடு கிடையாது வெளியே போக சொன்ன சிவாஜி - ரஜினி பட இயக்குனர் சொன்ன வார்த்தையால் வெடித்த பிரச்சனை!
Recommended image2
கல்யாணம் வேண்டாம்... ஆனால் குழந்தை பெற்றுக்கொள்ள ரெடி! சத்யராஜ் மகள் திவ்யா அதிரடி பேச்சு!
Recommended image3
நடிகர் அக்ஷய் குமாரின் 13 வயது மகளிடம் நிர்வாண போட்டோ கேட்ட நபர் - பின் நடந்த விபரீதம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved