- Home
- Cinema
- 'பாரதி கண்ணம்மா' சீரியலில் இருந்து வெளியேறிய ரோஷ்னி..? வைரலாகும் புதிய கண்ணம்மாவின் புகைப்படங்கள்.!
'பாரதி கண்ணம்மா' சீரியலில் இருந்து வெளியேறிய ரோஷ்னி..? வைரலாகும் புதிய கண்ணம்மாவின் புகைப்படங்கள்.!
விஜய் டிவி (Vijay TV) தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியலான 'பாரதி கண்ணம்மா' (Bharathi Kannamma) சீரியலில் இருந்து ரோஷ்னி ஹரிபிரயன் (Roshni Haripriyan) வெளியேறியதாக கூறப்படும் நிலையில், புதிய கண்ணம்மாவாக நடிக்க உள்ளதாக கூறப்படும் வினுஷா தேவியின் (Vinusha Devi) புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

விஜய் தொலைக்காட்சியில் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் 'பாரதி கண்ணம்மா' . தொடர்ந்து டி.ஆர்.பி-யில் இந்த சீரியல் கெத்து காட்டிவர முக்கிய காரணம், இந்த சீரியலில் நடிக்கும் கதாபாத்திரங்களின் தேர்வு என்றும் கூறலாம்.
குறிப்பாக கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடிக்கும் ரோஷ்னிக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. ஒன்றும் தெரியாத அப்பாவி பெண்ணான கண்ணம்மாவை, அவருடைய சித்தி, கொடுமை படுத்தி மோசமானமான ஒருவருக்கு திருமணம் செய்து வைக்க நினைத்த போது, எப்படியோ ஹீரோ அதனை தடுத்து நிறுத்தி கண்ணம்மாவை கை பிடிக்கிறார்.
தனக்கு ஆண்மை இல்லை என்று நினைக்கும் ஹீரோ... கண்ணம்மா கர்பமாவதால் அவரை சந்தேக பட துவங்கி கொடுமை படுத்த நினைக்கிறார். ஆனால் கண்ணம்மாவை வெறுத்த சௌந்தர்யா அவரை ஏற்று கொள்கிறார்.
இரட்டை குழந்தைகளை பெற்றெடுக்கும் கண்ணம்மாவுக்கு தெரியாமலேயே ஒரு குழந்தையை சொந்தர்யா தூக்கி செல்ல, ஒரு மகளை மட்டுமே பாசமாக வளர்த்து ஆளாக்குகிறார் கண்ணம்மா.
பல கஷ்டங்கள் மற்றும் சவால்களை கடந்து தற்போது தான் தன்னுடைய இரண்டாவது மகள் குறித்து கண்ணம்மாவுக்கு தெரிய வர, இந்த சீரியல் முடிய போகிறதோ... என்கிற சந்தேகமும் பலர் மனதில் தோன்றி வந்தது.
இந்நிலையில் திடீர் என, இந்த சீரியலில் இருந்து பட வாய்ப்புகள் கிடைத்ததால் விலகுவதாக கூறப்படுகிறது. மேலும் ரோஷினிக்கு பதில், வினுஷா தேவி என்பவர் நடிக்க உள்ளதாக கூறி அவருடைய புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
டார்க் ஸ்கின் அழகியான வினுஷா தேவி, டிக் டாக் மூலம் மிகவும் பிரபலமானவர். பல்வேறு குறும்படங்களிலும் நடித்துள்ளார். ஏற்கனவே யாரடி மோகினி சீரியல் பிரபலம் இந்த தொடரில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானதை தொடர்ந்து தற்போது இந்த தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.