- Home
- Cinema
- நடிகைகள் பற்றி அவதூறு பேச்சு! யூடியூபர் மீது நடிகர் சங்கம் சார்பில் முதல் புகார் கொடுத்த நடிகை ரோகினி!
நடிகைகள் பற்றி அவதூறு பேச்சு! யூடியூபர் மீது நடிகர் சங்கம் சார்பில் முதல் புகார் கொடுத்த நடிகை ரோகினி!
ஹேமா கமிட்டி குறித்து பிரபல தனியார் youtube சேனலில் பேசிய, மருத்துவரும்.. youtube பிரபலமுமான காந்தராஜ் திரைப்பட நடிகைகள் குறித்து அவதூறாக பேசியதற்கு, தற்போது நடிகர் சங்கம் சார்பில் முதல் புகாரை பிரபல நடிகை ரோகினி பதிவு செய்துள்ளார். இந்த சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Radhika About Hema Committee
கடந்த மாதம் மலையாள திரை உலகில் பரபரப்பை ஏற்படுத்திய ஹேமா கமிட்டி அறிக்கையில், சில முன்னணி நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் உள்ளிட்ட பலரது பெயர் அடிபட்டது. இந்த சம்பவம் தென்னிந்திய திரையுலகில் மிகப்பெரிய அளவில் பேசப்பட்ட நிலையில், அடுத்தடுத்து நடிகைகள் சிலர் பிரபலங்களால் தங்களுக்கு நேர்ந்த பாலியல் புகார்கள் குறித்து வெளிப்படையாக பேசி வந்தனர். நடிகை ஷகிலா, சார்மிளா, போன்ற நடிகைகள் கேரள சினிமாவில் மட்டுமல்ல.. தமிழ், தெலுங்கு, ஆகிய மொழிகளிலும் நடிகைகளுக்கு பாலியல் ரீதியான தொந்தரவு கொடுக்கப்படுவதாக கூறி இருந்தனர். இதனை குஷ்பூ, ராதிகா, ஊர்வசி, போன்ற மூத்த நடிகைகளும்... சில சம்பவங்களை கூறி, திரையுலகில் பாலியல் தொந்தரவு இருக்கிறது என்பதை ஒப்புக்கொண்டனர்.
Vishal About Hema Committee Report:
இதைத்தொடர்ந்து பேசிய நடிகர் விஷால், திரை உலகில் யாராவது அட்ஜஸ்ட்மென்ட் கேட்டால் செருப்பால் அடியுங்கள் என ஆவேசமாக பேசினார். நடிகர் ஜீவா ஹேமா கமிட்டி குறித்து கேள்வி எழுப்பியதற்கு சீறிக்கொண்டு சண்டைக்கு பாய்ந்தார். சில பெரிய பிரபலங்கள்... இந்த அறிக்கைக்குறித்து தற்போது வரை எதுவும் பேசாமல் உள்ளனர். நடிகர் சங்க செயலாளரான விஷால், கூடிய விரைவில் தமிழ் சினிமாவில் நடக்கும் பாலியல் தொல்லை குறித்து விசாரிக்க குழு ஒன்று அமைக்கப் போவதாக தெரிவித்திருந்த நிலையில், தற்போது தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில், 'விசாகா' என்கிற கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. அந்த கமிட்டியின் தலைவராக பிரபல நடிகை ரோகினி நியமிக்கப்பட்டுள்ளார்.
Doctor And Youtuber Kantharaj:
இந்நிலையில் ஹேமா கமிட்டி மற்றும் நடிகைகளுக்கு ஏற்படும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை குறித்து சமூக வலைதளத்தில் பல youtuber-கள் பணம் வாங்கிக்கொண்டு அநாகரீகமாக பேசி வருவதாக ஏற்கனவே சிலர் பொங்கி எழுந்து கொண்டிருந்த நிலையில், பிரபல மருத்துவரும் youtuber-மான காந்தராஜ் என்பவர் நடிகைகள் குறித்து செப்டம்பர் 7ஆம் தேதி தனியார் youtube சேனல் ஒன்றில் பேசிய கருத்து பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் நடிகர்களை தாண்டி... இயக்குனர், ஒளிப்பதிவாளர் உட்பட தொழில்நுட்ப கலைஞர்களையும் சில நடிகைகள் அட்ஜஸ்ட் செய்ய வேண்டிய நிலை உள்ளது என கூறியிருந்தார். இதற்கு நடிகைகள் மட்டுமின்றி நெட்டிசன்கள் மத்தியிலும் கடுமையான எதிர்ப்பு எழுந்தது.
Actress Rohini:
இதைத்தொடர்ந்து நடிகையும் 'விசாகா' கமிட்டியின் தலைவருமான ரோகினி, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் youtuber காந்தராஜ் மீது குற்ற வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். இந்த புகார் மனுவில் கூறியுள்ளதாவது... "யூடியூப் தளங்களில் நடிகைகளை ஒட்டுமொத்தமாக கொச்சையாக பேசி, அனைத்து நடிகைகளும் விபச்சாரிகள் என்பது போல் விமர்சகர் ஒருவர் கூறியதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தேன். அவருடைய பேச்சு திரை உலகை சார்ந்த அனைத்து நடிகைகளையும் தவறாக சித்தரிக்கும் விதத்தில் உள்ளது. எந்தவித ஆதாரமும் இன்றி, இது போன்ற கருத்துக்களை அவர் தெரிவித்துள்ளார். நடிகைகள் என்றாலே அட்ஜஸ்ட்மென்ட் செய்துதான் வாய்ப்பு பெறுகிறார்கள் என்பது போல இவர் கூறி உள்ளது... மேடை நாகரீகம் மற்றும் சமூகப் பொறுப்பு இன்றி கூறப்பட்ட கருத்தாகவே பார்க்கப்படுகிறது. மேலும் ஆதாரம் எதுவும் இல்லாமல், இவர் பேசி உள்ளது சினிமா துறையைச் சார்ந்த ஒட்டுமொத்த பெண்களையும் இழிவு படுத்துவது போல் உள்ளது.
விஜய் டிவி ஹிட் சீரியலில் இருந்து திடீர் என விலகிய நடிகை! இனி அவருக்கு பதில் இவர் தான்!
Nadigar Sangam First Police Complaint:
பணத்துக்காகவும் புகழுக்காகவும் நடிகைகள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் என்பது போல் பேசி உள்ள இவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர் தண்டிக்க படாவிட்டால் எதிர்காலத்தில் ஆதாரம் இல்லாமல் சமூக வலைதளங்களில் புகழ் தேடும் கும்பல் அதிகமாகும் என தன்னுடைய புகார் மனுவில் நடிகை ரோகினி கூறியுள்ளார். இந்த புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுத்த சைபர் கிரைம் போலீசாருக்கு உத்தரவு விடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் நடிகை ரோகிணி கொடுத்த இந்த புகார் நடிகர் சங்கம் சார்பில் முதல் முதலாக கொடுக்கப்பட்ட போலீஸ் புகார் என்பது குறிப்பிடத்தக்கது.