- Home
- Cinema
- Exclusive : பேஷன் ஷோவில்... ஜிகுஜிகு உடையில் ஜிமிக்கி பொண்ணாக வந்த ராஷ்மிகா மந்தனா - வைரலாகும் கியூட் கிளிக்ஸ்
Exclusive : பேஷன் ஷோவில்... ஜிகுஜிகு உடையில் ஜிமிக்கி பொண்ணாக வந்த ராஷ்மிகா மந்தனா - வைரலாகும் கியூட் கிளிக்ஸ்
நடிகை ராஷ்மிகா மந்தனா மும்பையில் நடைபெற்ற பேஷன் ஷோவில் ஜிகு ஜிகு உடையில் வந்து கலந்துகொண்டபோது எடுத்த எக்ஸ்குளூசிவ் புகைப்படங்களை தற்போது பார்க்கலாம்.

தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற தென்னிந்திய மொழி படங்களில் நடித்து அசத்திய நடிகை ராஷ்மிகா மந்தனா தற்போது பான் இந்தியா நடிகையாக கலக்கி வருகிறார். இவர் கைவசம் தற்போது 3 பாலிவுட் படங்கள் உள்ளன. இதுதவிர தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து வருகிறார்.
குறிப்பாக தெலுங்கில் சுகுமார் இயக்கத்தில் பிரம்மாண்ட படமாக தயாராகி வரும் புஷ்பா 2 திரைப்படத்தில் நடிகர் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் ராஷ்மிகா. இப்படத்தின் ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதுதவிர பாலிவுட்டில் ரன்பீர் கபூர் நடிப்பில் தயாராகி வரும் அனிமல் என்கிற பான் இந்தியா படத்திலும் ஹீரோயினாக நடித்து வருகிறார் ராஷ்மிகா. இதற்காக அவர் ரூ.4 கோடி வரை சம்பளம் வாங்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
நடிகை ராஷ்மிகாவுக்கு தற்போது பாலிவுட்டில் அதிகளவில் பட வாய்ப்புகள் குவிந்து வருவதால், அவர் மும்பையில் சொந்தமாக வீடு ஒன்றை வாங்கி இருக்கிறாராம். இதன்மதிப்பு பல கோடி இருக்கும் என தெரிகிறது.
இதையும் படியுங்கள்... Oscar 2023 : என்னது ஆஸ்கார் விருதை பிளாஸ்டிக்கால் செய்தார்களா? - பலரும் அறிந்திடாத 5 டக்கரான தகவல்கள் இதோ
இப்படி நடிப்பில் பிசியாக இருந்தாலும், நடிகை ராஷ்மிகா, மாடலிங்கிலும் அதிகளவில் ஆர்வம் காட்டி வருகிறார். குறிப்பாக விருது விழாக்களுக்கு வித விதமான உடைகளில் வந்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி வருகிறார்.
அந்த வகையில் அண்மையில் மும்பையில் நடைபெற்ற பேஷன் ஷோ ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார் ராஷ்மிகா. அப்போது அவர் எடுத்த எக்ஸ்குளூசிவ் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.
ஜிகு ஜிகு உடையணிந்து ஜிமிக்கி பொண்ணாக ரேம்ப் வாக் வந்து அசத்திய நடிகை ராஷ்மிகா மந்தனாவின் இந்த லேட்டஸ்ட் புகைப்படங்கள் படு வைரல் ஆகி வருகின்றன.
இதையும் படியுங்கள்... இந்தியன் 2 ஷூட்டிங் ஸ்பாட்டை முற்றுகையிட முயன்ற பொதுமக்கள்... படக்குழுவினருடன் சண்டை போட்டதால் பரபரப்பு
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.