- Home
- Cinema
- Rashmika Mandanna: ராஷ்மிகா மந்தனாவின் முதல் நாள் பாரிஸ் ட்ரிப் இப்படித்தான் இருந்ததாம்! வேற லெவல் போட்டோஸ்!
Rashmika Mandanna: ராஷ்மிகா மந்தனாவின் முதல் நாள் பாரிஸ் ட்ரிப் இப்படித்தான் இருந்ததாம்! வேற லெவல் போட்டோஸ்!
நடிகை ராஷ்மிகா மந்தனா சமீபத்தில் பாரிஸுக்கு சென்று வந்த நிலையில், தன்னுடைய முதல் நாள் அனுபவம் குறித்து, புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு வெளிப்படுத்தியுள்ளார்.

2016 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியான ‘கிரிக் பார்ட்டி’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. மிக குறுகிய நாட்களிலேயே முன்னணி நடிகை என்கிற இடத்தை பிடித்துவிட்டார்.
குறிப்பாக கடந்த 2018ம் ஆண்டு விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து இவர் நடித்த தெலுங்கு திரைப்படமான 'கீதா கோவிந்தம்' திரைப்படம் தெலுங்கு ரசிகர்கள் மட்டும் இன்றி தமிழ் ரசிகர்களையும் அதிகமாகவே கவர்ந்து விட்டது.
அதனைத் தொடர்ந்து அவர் நடித்த டியர் காம்ரேட் படமும் நல்ல வரவேற்பை பெற்றது. இதில் விஜய் தேவரகொண்டாவுடன் லிப் லாக் காட்சிகளில் எல்லாம் நடித்து, இளசுகளின் கனவு கன்னியாக மாறிவிட்டார்.
இவர்கள் இருவருக்குள்ளும் காதல் துளிர் விட்டு பொங்கி வழிந்து கொண்டிருப்பதாக சில கிசுகிசுக்கள் எழுந்து வந்தாலும், இருவருமே தொடர்ந்து மௌனம் காத்து வருகிறார்கள்.
இது ஒரு புறம் இருந்தாலும், தொடர்ந்து தான் நடிக்கும் அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வரும் ராஷ்மிகாவுக்கு பாலிவுட் திரையுலகிலும் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உருவாகிவிட்டது.
படப்பிடிப்பு இல்லாத நாட்களை வெளிநாட்டில் கழிப்பதை வழக்கமாக வைத்துள்ள நடிகைகள் மத்தியில் ராஷ்மிகா மட்டும் விதிவிலக்கா என்ன?
நடிகை ராஷ்மிகா மந்தனா சமீபத்தில் பாரிஸுக்கு சென்று வந்த நிலையில், தன்னுடைய முதல் நாள் அனுபவம் குறித்து, புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு வெளிப்படுத்தியுள்ளார்.
கடந்த மாதம் பாரிஸுக்கு சென்று வந்த ராஷ்மிகா, பாரிஸில் தன்னுடைய முதல் நாள் எப்படி இருந்தது என்பதை புகைப்படத்துடன் வெளியிட்டு ரசிகர்களிடம் தன்னுடைய மகிழ்ச்சியை பகிர்துகொண்டுள்ளார்.
வெளியிடங்களுக்கு சென்று போட்டோ எடுத்து கொண்டது முதல், விதவிதமான உணவை உண்டு மகிழ்ந்தது வரை அன்றைய தினம் எப்படி இருந்தது என்பதை காட்டியுள்ளார்.
இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பார்க்கப்பட்டு வருவதோடு லைக்குகளை குவித்து வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.