விவாகரத்துக்கு பின் மீண்டும் காதல் கணவருடன் சேர்ந்து வாழ்கிறாரா பிரபல தமிழ் நடிகை? வைரலாகும் புகைப்படம்..!
பிரபல நட்சத்திர தம்பதிகள், திருமணம் ஆகி கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்த பின்னர், மீண்டும் தங்களது திருமண நாளை ஒன்றாக சேர்ந்து கொண்டாடியுள்ளதால், இவ்ரகள் மீண்டும் ஒன்றாக வாழ்கிறார்களா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.
ரஜினிகாந்த் கதை எழுதி தயாரித்த ’வள்ளி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் பிரியா ராமன்.
இந்த படத்தை தொடர்ந்து சூர்யவம்சம், சின்ன ராஜா, உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளப்படங்களில் நடித்தார்.
1999ம் ஆண்டு வெளியான ’நேசம் புதுசு’ படத்தில் தன்னுடன் இணைந்து நடித்த நடிகர் ரஞ்சித்தை காதலித்து திருமணம் செய்துகொண்டவர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.
பின்னர் திடீர் என கருத்து வேறுபாடு காரணமாக, இருவரும் மனம் ஒற்று பிரிவதாக கடந்த 2014 ஆண்டு அறிவித்த நிலையில் விவாகரத்தும் பெற்றனர்.
திருமணத்திற்கு பின் திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திய பிரியா ராமன், விவாகரத்துக்கு பின்னர் சீரியல்களிலும், நிகழ்ச்சி தொகுப்பிலும் கவனம் செலுத்த தொடங்கினார். தற்போது இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நடித்து வரும், 'செம்பருத்தி' சீரியல் மற்ற சீரியல்களுக்கு டிஆர்பியில் செம்ம டஃப் கொடுத்து வருகிறது.
நடிகர் ரஞ்சித்தும் தற்போது 'செந்தூர பூவே' என்கிற சீரியலில் நடித்து வருகிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலிலுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
இந்நிலையில் ரஞ்சித் - பிரியா ராமன் தம்பதிகள் விவாகரத்து பெற்று 8 ஆண்டுகளுக்கு பின்னர், மீண்டும் தங்களது திருமண நாளில் நெருக்கமாக எடுத்து கொண்ட செல்பி புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.
இதனால் இந்த தம்பதிகள் மீண்டும் மணவாழ்க்கையில் ஒன்று இணைந்து விட்டார்களா என்கிற கேள்வி ஒருபுறம் இருந்தாலும், பலர் இருவருக்கும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களது லேட்டஸ்ட் செல்பி புகைப்படமும் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.