கவர்ச்சிக்கு தாவிய பிரியா பவானி ஷங்கர்..! சல்லி சல்லியாய் ஓட்டை போட்ட உடையில்.. இடையை காட்டி ஒய்யார போஸ்!
நடிகை பவானி ஷங்கர் தன்னுடைய இடையை காட்டியபடி, சல்லி சல்லியாய் ஓட்டை போட்ட டாப் அணிந்து வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் ஹாட் புகைப்படங்கள்.. ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஒரு செய்தி வாசிப்பாளராக சின்னத்திரையில் தன்னுடைய கெரியரை துவங்கி, பின்னர் சீரியல் நடிகை, தொகுப்பாளர், என அடுத்தடுத்த கட்டத்திற்கு தன்னுடைய திறமையை நகர்த்திச் சென்றவர் பிரியா பவானி ஷங்கர்.
சின்னத்திரையில் நிலையான இடத்தை எட்டிய பின்னர், யாரும் எதிர்பாராத விதமாக வெள்ளி திரை நாயகியாக மாறினார். இவர் நடிகர் வைபவுக்கு ஜோடியாக 2017 ஆம் ஆண்டு இயக்குனர் ரத்தக்குமார் இயக்கத்தில் வெளியான 'மேயாத மான்' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். முதல் படமே இவருக்கு வெற்றி படமாக அமைந்த நிலையில், அடுத்தடுத்த படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தது.
விஜய் டிவி சீரியல் அம்மா நடிகைக்கு 45 வயதில் மறுமணமா? அவரே வெளியிட்ட பரபரப்பு தகவல்!
இந்த படத்தை தொடர்ந்து நடிகர் கார்த்தி நடித்த 'கடைக்குட்டி சிங்கம்', எஸ்.ஜே. சூர்யாவுக்கு ஜோடியாக மான்ஸ்டர், போன்ற பல படங்களில் நடித்தார். சமீபத்தில் இவர் நடிப்பில் தனுஷுடன் நடித்த திருச்சிற்றம்பலம், அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்த 'யானை' போன்ற படங்கள் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.
மேலும் 'ருத்ரன்', 'பொம்மை', 'இந்தியன் 2', 'பத்து தல' போன்ற படங்கள் இவர் கைவசம் உள்ளன. தமிழைத் தவிர தெலுங்கு திரைபடம் வாய்ப்புகளும் இவருக்கு கிடைத்து வருகிறது. அதே போல் வெப் தொடர் ஒன்றில் சமந்தாவின் முன்னாள் கணவர் நாகை சைதன்யாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
அடுத்தடுத்து படங்களில் நடித்து வரும் பிரியா பவானி ஷங்கர், தற்போது கவர்ச்சிக்கு தாவியுள்ளார். கவர்ச்சியான உடையில், தன்னுடைய இடைத்தெரிய போஸ் கொடுத்து ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளார். அதிலும், சல்லி சல்லியாய் ஓட்டை போட்ட டாப் அணிந்து இவர் போஸ் கொடுத்துள்ளது செம்ம ஹாட்டாக உள்ளது என ரசிகர்கள் கமெண்ட்ட செய்து வருகிறார்கள்.