டாஸ்மாக் திறக்கப்போறாங்கன்னு சந்தோஷப்பட்ட பிரபல நடிகை... ஒற்றை ட்வீட்டால் உருவான குழப்பம்...!
தமிழ், தெலுங்கு, இந்தி திரையுலகில் பிரபலமான நடிகை ஒருவர் தமிழக அரசின் டாஸ்மாக் திறப்பு குறித்து பதிவிட்டுள்ள ட்வீட் சர்ச்சையையும், குழப்பத்தையும் உருவாக்கியுள்ளது.
தமிழ், தெலுங்கு, இந்தி திரையுலகில் பிரபலமானவர் நடிகை பிரியா ஆனந்த். தமிழில் 2008ம் ஆண்டு வெளியான வாமனன் படம் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானவர். நூற்றென்பது, எதிர் நீச்சல், வணக்கம் சென்னை, வை ராஜா வை, அரிமா நம்பி, ஒரு ஊருல ரெண்டு ராஜா, எல்.கே.ஜி. உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக வலம் வரும் பிரியா ஆனந்த், சமீபத்தில் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் டாஸ்மாக் திறப்பு குறித்து பதிவிட்டுள்ள ட்வீட் சர்ச்சையையும், குழப்பத்தையும் உருவாக்கி இருக்கு.
தமிழகத்தில் கொரோனா முதல் அலையின் போது அதிமுக அரசு டாஸ்மாக் கடைகளை திறந்ததற்கு எதிராக திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்தின. ஆனால் தற்போது மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதி அளித்துள்ளது.
கொரோனா தொற்று குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை டாஸ்மாக் கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்திருப்பது பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. இந்நிலையில் பிரியா ஆனந்த் ‘தமிழக அரசு டாஸ்மாக் கடைகளை திறப்பதாக அறிவித்த போது நான்’ என பதிவிட்டு சிரித்த முகத்துடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அந்த ட்வீட் உடன் பிரியா ஆனந்த் போட்ட இமோஜிக்கள் தான் குழப்பத்தை உருவாக்கியுள்ளது. கண்களை மூடியிருக்கும் குரங்கு, தலையில் அடித்துக்கொள்ளும் பெண், கவலைப்படுவது போன்ற ஈமோஜிகளையும் தனது கேப்ஷனுடன் சேர்த்து பதிவிட்டுள்ளார். இதை பார்க்கும் ரசிகர்களோ என்ன மாதிரியான மனநிலை இது?, நீங்கள் போட்ட ட்வீட் புரியவில்லை என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர். ஒரு சிலரோ டாஸ்மாக் திறந்ததற்கு சந்தோஷப்படுறீங்களா? என வறுத்தெடுத்து வருகின்றனர்.