பாலைவனத்தில் இப்படி ஒரு போட்டோ ஷூட்டா?... பட்டையைக் கிளப்பும் பூஜா ஹெக்டே... தீயாய் பரவும் புகைப்படங்கள்...!

First Published Nov 16, 2019, 12:49 PM IST

ஜீவா நடிப்பில் வெளிவந்த "முகமூடி" படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் பூஜா ஹெக்டே. அதனைத் தொடர்ந்து தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் படு பிசியாக நடித்து வருகிறார். தற்போது இந்தியில் பூஜா ஹெக்டே நடித்த "ஹவுஸ்ஃபுல் 4" படம் சூப்பர் டூப்பர் ஹிட்டாகியுள்ளது. மீடு விவகாரத்தில் ஹீரோயின்களுக்கு ஆதரவாக கொடி பிடித்த பூஜா ஹெக்டே, நாயகர்களுக்கு இணையாக நாயகிகளுக்கு சம்பளம் தர தயாரிப்பாளர்கள் விரும்புவதில்லை என ஓபன் டாக் விட்டு அதிரடி கிளப்பினார். 

தற்போது தெலுங்கில் ஸ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜுன் உடன் "அலா வைகுண்டபுரம்லோ" என்ற படத்தில் நடித்து வருகிறார். கவர்ச்சி போட்டோ ஷூட்களில் பங்கேற்கும் பூஜா ஹெக்டே, தனது சோசியல் மீடியா பக்கங்களில் அந்த புகைப்படங்களை ஷேர் செய்து வருகிறார். 

சமீபத்தில் படப்பிடிப்பு தளத்தில் பூஜா ஹெக்டே எடுத்த மார்டன் போட்டோ ஷூட் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த லேட்டஸ்ட் கிளிக்ஸ் இதோ...