ஆத்தாடி ஒரு செகன்டுக்கு 10 லட்சம் சம்பளம் வாங்கும் ‘இந்த’ கோலிவுட் நடிகை பற்றி தெரியுமா?
நடிகைகள் சினிமாவை போல் விளம்பரங்களிலும் நடித்து கோடி கோடியாய் சம்பாதித்து வருகிறார்கள். அப்படி விளம்பரத்தில் நடிக்க அதிக சம்பளம் வாங்கிய நடிகையை பற்றி இந்த தொகுப்பில் பார்க்க உள்ளோம்.

Highest Paid Tamil Actress
சினிமாவில் நடிப்பவர்களுக்கு கோடி கோடியாய் சம்பளம் வாரி வழங்கப்படுகிறது. நடிகைகளின் சம்பளம் 50 கோடியை தாண்டாவிட்டாலும் நடிகர்களின் சம்பளம் 300 கோடியை எட்டிவிட்டது. இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள் என்றால் அது பிரியங்கா சோப்ரா மற்றும் தீபிகா படுகோன் தான். அதுவே தென்னிந்திய திரையுலகை எடுத்துக்கொண்டால் நயன்தாரா, சாய் பல்லவி, திரிஷா ஆகியோர் தான் தற்போது அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளாக வலம் வருகிறார்கள். நடிகைகள் சினிமாவை போல் விளம்பரங்களிலும் நடித்து கோடி கோடியாய் சம்பாதித்து வருகிறார். இதில் நடிகை சாய் பல்லவி விதிவிலக்கு, அவர் விளம்பரங்களில் நடிக்கவே கூடாது என்கிற பாலிசியை கடைபிடித்து வருகிறார்.
ஒரு செகண்டுக்கு 10 லட்சம் சம்பளம் வாங்கிய நடிகை
அந்த வகையில் தென்னிந்திய நடிகை ஒருவர் விளம்பரத்தில் நடிக்க பெரும் தொகையை சம்பளமாக வாங்கி இருக்கிறார். மொத்தம் 50 செகண்ட் ஓடக்கூடிய அந்த விளம்பரத்தில் நடிப்பதற்காக ரூ.5 கோடி சம்பளமாக வாங்கினாராம் அந்த நடிகை. அவர் நடித்த அந்த விளம்பரத்தை தமிழ் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு, மலையாளம் போன்ற பிற மொழிகளிலும் படமாக்கினார்களாம். பான் இந்திய மொழிகளில் உருவானதால் அந்த விளம்பரத்திற்கு 5 கோடி சம்பளம் வாங்கி இருக்கிறார் அந்த நடிகை. இதை பிரித்து பார்த்தால் ஒரு செகண்டுக்கு அவர் சுமார் ரூ.10 லட்சம் வாங்கி இருக்கிறார்.
யார் அந்த நடிகை?
அந்த நடிகை வேறுயாருமில்லை லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா தான். இவர் டாடா ஸ்கை விளம்பரத்தில் நடித்ததற்காக தான் இம்புட்டு தொகையை சம்பளமாக வாங்கினாராம். தமிழ் சினிமாவிலும் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக வலம் வரும் நயன்தாரா, தற்போது ஒரு படத்துக்கு ரூ.15 கோடி சம்பளம் வாங்கி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நடிகை நயன்தாரா கைவசம் ஹாய், ராக்காயி, மூக்குத்தி அம்மன் 2, மண்ணாங்கட்டி போன்ற தமிழ் படங்கள் உள்ளன. இதுதவிர மலையாளத்தில் நிவின் பாலி உடன் டியர் ஸ்டூடண்ட்ஸ், தெலுங்கில் சிரஞ்சீவி ஜோடியாக ஒரு படம் என லிஸ்ட் நீண்டுகொண்டே செல்கிறது.
நயன்தாரா சொத்து மதிப்பு
தமிழ் சினிமாவில் சொந்தமாக ஜெட் விமானம் வைத்திருக்கும் ஹீரோயின் என்றால் அது நயன்தாரா தான். அவர் வைத்திருக்கும் பிரைவேட் ஜெட்டின் விலை ரூ.50 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. இதுதவிர ரெளடி பிக்சர்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி அதன் மூலமாகவும் பல கோடிகள் சம்பாதித்து வரும் நயன்தாரா, பல்வேறு தொழில்களிலும் முதலீடு செய்து பிசினஸிலும் கொடிகட்டிப் பறக்கிறார். இவருக்கு சொந்தமாக சென்னை போயஸ் கார்டனில் பிரம்மாண்ட பங்களா ஒன்று உள்ளது. அதன் மதிப்பு ரூ.100 கோடிக்கு மேல் இருக்குமாம். இப்படி ராணி போல் வாழும் நயன்தாராவின் சொத்து மதிப்பு 200 கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

