- Home
- Cinema
- ஒரே ஒரு போன் கால்... ரூ.1 லட்சம் குளோஸ்! நேக்கா பேசி நடிகை நக்மாவிடம் பணத்தை அபேஸ் பண்ணிய மோசடி கும்பல்
ஒரே ஒரு போன் கால்... ரூ.1 லட்சம் குளோஸ்! நேக்கா பேசி நடிகை நக்மாவிடம் பணத்தை அபேஸ் பண்ணிய மோசடி கும்பல்
நடிகை நக்மாவிடம் மர்ம நபர் ஒருவர் போனில் பேசி அவரது வங்கி கணக்கில் இருந்து கிட்டத்தட்ட ரூ.1 லட்சம் அபேஸ் பண்ணிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

90-களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நக்மா. நடிகை ஜோதிகாவின் தங்கையான இவர், தமிழில், ஷங்கர் இயக்கிய காதலன், ரஜினிக்கு ஜோடியாக பாட்ஷா போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் படங்களில் நடித்து பேமஸ் ஆனார். தற்போது 48 வயதாகும் நக்மா, திருமணம் செய்துகொள்ளாமல் சிங்கிளாகவே வாழ்ந்து வருகிறார். இவர் தற்போது சினிமாவில் நடிக்காவிட்டாலும், அரசியலில் முழுவீச்சில் இறங்கி இருக்கிறார்.
இந்நிலையில், நடிகை நக்மாவிடம் மர்ம நபர் ஒருவர் போனில் பேசி அவரது வங்கி கணக்கில் இருந்து கிட்டத்தட்ட ரூ.1 லட்சம் அபேஸ் பண்ணிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. உங்கள் வங்கி கணக்கின் KYC விவரங்களை அப்டேட் செய்ய இந்த லிங்கை கிளிக் செய்யுமாறு கூறி நடிகை நக்மாவின் போனுக்கு ஒரு மெசேஜ் வந்துள்ளது. அவரும் அந்த லிங்கை கிளிக் செய்தவுடன், ஒரு போன் கால் வந்திருக்கிறது. அதில் பேசிய நபர் தான் வங்கி அதிகாரி என்றும், தான் KYC விவரங்களை அப்டேட் செய்ய உதவுவதாகவும் கூறி இருக்கிறார்.
இதையும் படியுங்கள்... கமலுடன் கைகோர்க்கும் சிம்பு? வீடியோவுடன் வெளியான முக்கிய அறிவிப்பால் எகிறிய எதிர்பாப்பு!
இப்படி நக்மாவிடம் நேக்காக பேசி அவரது செல்போனை தனது கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக் கொண்ட அந்த நபர், அதிலிருந்து 99,998 ரூபாயை வேறு ஒரு வங்கி கணக்கிற்கு மாற்றி உள்ளார். தான் அந்த நபரிடம் தனது வங்கி விவரங்கள் குறித்து எந்த தகவலையும் பகிராத போதும் இந்த மோசடி நடந்துள்ளதாக நடிகை நக்மா தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி நடிகை நக்மாவின் போனுக்கு 20க்கும் மேற்பட்ட OTPகளை அனுப்பி அதன்மூலம் பெரும் தொகையை சுருட்ட முயன்றிருக்கிறார் அந்த நபர், ஆனால் நடிகை நக்மா அந்த விவரங்களை பகிர்ந்து கொள்ளாததால், அதிகளவில் பணத்தை இழக்கவில்லை என கூறியுள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து மும்பை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார் நக்மா.
அப்போது தான் ஒரு அதிர்ச்சி தகவலும் கிடைத்துள்ளது. அதாவது மும்பையில் கடந்த சில தினங்களாக இதுபோன்ற மோசடி அதிகளவில் நடந்து வருவதாகவும், இதுவரை 80 பேரில் வங்கிக் கணக்குகளில் இருந்து பல லட்சம் ரூபாயை மோசடி கும்பல் அபேஸ் செய்துள்ளதாகவும், அந்த 80 பேரில் நடிகை நக்மாவும் ஒருவர் என தெரியவந்துள்ளது. மும்பையில் நடக்கும் இந்த நூதன மோசடி பலரையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
இதையும் படியுங்கள்... மயோசிட்ஸ் பிரச்சனையில் இருந்து மீண்ட சமந்தாவுக்கு... மகளிர் தினத்தில் குஷி படக்குழு செய்த விஷயம்! வைரல் போட்டோ