- Home
- Cinema
- Nadhiya cool pic : கூல் மோடுக்கு மாறிய நதியா.. பீச்சில் டவல் உடுத்து அமர்ந்திருக்கும் 80ஸ் கனவு கன்னி..
Nadhiya cool pic : கூல் மோடுக்கு மாறிய நதியா.. பீச்சில் டவல் உடுத்து அமர்ந்திருக்கும் 80ஸ் கனவு கன்னி..
Nadhiya cool pic : 80ஸ் கிட்ஸ்களின் கனவு கன்னியாக வலம் வந்த நதியா வயதானாலும் இன்னும் இளமை மாறாமல் ரசிகர்களை சொக்க வைத்து வருகிறார்.. அந்த வகையில் தற்போதைய புகைப்படம் வைரலாகி வருகிறது...

nadhiya
1985ம் ஆண்டு வெளியான “பூவே பூச்சூடவா” படம் மூலம் தமிழ் ரசிகர்களின் மனம் கவர்ந்தவர் நதியா. 80ஸ் கிட்ஸ்களின் கனவு கன்னியாக வலம் வந்த நதியா, உயிரே உனக்காக , நிலவே மலரே, ராஜாதி ராஜா, சின்ன தம்பி பெரிய தம்பி உள்ளிட்ட படங்களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக வலம் வந்தார்.
nadhiya
மலையாளம், தெலுங்கு சினிமாவிலும் முன்னணி நடிகையாக புகழ் பெற்றவர். மற்ற நடிகைகளை விட வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தியதால் ரசிகர்களின் மனதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார்.
nadhiya
1988ம் ஆண்டு சிரீஸ் காட்போல் என்பவரை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆன நதியா, சினிமாவில் நடிப்பதை நிறுத்திக்கொண்டார்.
nadhiya
சிரீஸ் தம்பதிக்கு சனம், ஜனா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். நீண்ட நாட்களாக சினிமாவில் நடிக்காமல் இருந்த நதியா, 2004ம் ஆண்டு எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி என்ற படத்தில் ஜெயம் ரவிக்கு அம்மாவாக நடித்தார்.
nadhiya
அதன் பின்னர் தமிழ், தெலுங்கு சினிமாவில் தொடர்ந்து நடித்து வரும் நதியா, சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் இணைந்துள்ளளார்.
nadhiya
அந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது குடும்பத்தினர் உடன் வெளிநாடு சுற்றுலா சென்று வந்த புகைப்படங்களை நதியா பதிவிட்டுள்ளார்.
nadhiya
80ஸ் கிட்ஸ்களின் கனவு கன்னியாக வலம் வந்த நதியா வயதானாலும் இன்னும் இளமை மாறாமல் ரசிகர்களை சொக்க வைத்து வருகிறார்.. அந்த வகையில் தற்போதைய புகைப்படம் வைரலாகி வருகிறது...
nadhiya
டவல் சுற்றியபடி சில்லெனு பீச்சை ரசித்தபடி நடிகை நதியா அமர்ந்திருக்கும் மிக ஸ்டைலான புகைப்படம் அவரது ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது...