MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • கல்யாணம்... டைவர்ஸ்... ரிப்பீட்டு..! 3வது கணவரை விவாகரத்து செய்த ரவி மோகன் பட நடிகை..!

கல்யாணம்... டைவர்ஸ்... ரிப்பீட்டு..! 3வது கணவரை விவாகரத்து செய்த ரவி மோகன் பட நடிகை..!

நடிகர் ரவி மோகனின் அடங்கமறு படத்தில் நடித்த நடிகை, கடந்த 2023-ம் ஆண்டு மூன்றாவது திருமணம் செய்த நிலையில், இரண்டே ஆண்டுகளில் விவாகரத்து பெற்றுவிட்டதாக அறிவித்து உள்ளார்.

2 Min read
Ganesh A
Published : Nov 17 2025, 12:17 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Meera Vasudevan Third Divorce
Image Credit : stockphoto

Meera Vasudevan Third Divorce

தனது திருமண உறவை முறித்துக் கொண்டதை நடிகை மீரா வாசுதேவன் உறுதிப்படுத்தியுள்ளார். இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த ஒரு பதிவு மூலம் அவர் இந்த விஷயத்தை அறிவித்துள்ளார். ஒளிப்பதிவாளர் விபின் உடனான திருமண உறவையே அவர் முடிவுக்குக் கொண்டு வந்துள்ளார். சமீபத்தில் விபினுடன் இருந்த படங்களை மீரா இன்ஸ்டாகிராமில் இருந்து நீக்கியதை அடுத்து, விவாகரத்து வதந்திகள் வலுத்தன. இந்த நிலையில், அவரே அதை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறார்.

24
விவாகரத்து பெற்றார் மீரா வாசுதேவன்
Image Credit : Instagram

விவாகரத்து பெற்றார் மீரா வாசுதேவன்

இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது : ''நான் நடிகை மீரா வாசுதேவன். 2025 ஆகஸ்ட் முதல் நான் சிங்கிள் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறேன். என் வாழ்க்கையின் மிக அழகான மற்றும் அமைதியான கட்டத்தில் நான் இருக்கிறேன்,'' என்று தனது படத்தைப் பகிர்ந்து மீரா இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

2023ம் ஆண்டு ஏப்ரல் 21 அன்று மீரா மற்றும் விபின் திருமணம் நடைபெற்றது. கோயம்புத்தூரில் உள்ள ஒரு கோவிலில் நடந்த சடங்குகளுக்குப் பிறகு, இருவரும் அதிகாரப்பூர்வமாக பதிவுத் திருமணம் செய்து கொண்டனர். நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே இந்த விழாவில் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து மீரா திருமணப் படங்கள் மற்றும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தபோதுதான் ரசிகர்கள் இந்த செய்தியை அறிந்தனர்.

Related Articles

Related image1
திருமணம் செய்வதில் வனிதாவுக்கே டஃப் கொடுத்த பிரபல நடிகை!! அதுக்குன்னு இத்தனை தடவையா!
Related image2
வனிதாவுக்கே டஃப் கொடுப்பாங்க போல... சைலண்டாக 3வது திருமணம் செய்துகொண்ட பிரபல தமிழ் நடிகை - குவியும் வாழ்த்து
34
யார் இந்த மீரா வாசுதேவன்?
Image Credit : Instagram

யார் இந்த மீரா வாசுதேவன்?

'தன்மத்ரா' படத்தின் மூலம் மலையாள ரசிகர்களின் பிரியமான நடிகையாக மாறியவர் மீரா வாசுதேவன். ஒரு இடைவெளிக்குப் பிறகு, ஏசியாநெட்டில் ஒளிபரப்பான 'குடும்பவிளக்கு' என்ற சீரியல் மூலம் மீண்டும் ரீ-எண்ட்ரி கொடுத்தார். பின்னர், சீரியல் ரசிகர்களின் விருப்பமான நடிகையாக மாறிய அவர், அதே சீரியலின் ஒளிப்பதிவாளரான விபினை திருமணம் செய்து கொண்டார். இது மீராவின் மூன்றாவது திருமணமாகும். முன்னதாக விஷால் அகர்வால் என்பவரை 2005-ம் ஆண்டு திருமணம் செய்து அவரை 2008ல் பிரிந்தார். பின்னர் நடிகர் ஜான் கொக்கேனை 2012-ம் ஆண்டு திருமணம் செய்து அவரை 2016-ம் ஆண்டு விவாகரத்து செய்து பிரிந்தார். தற்போது அவரது 3வது திருமணமும் விவாகரத்தில் முடிந்துள்ளது.

44
ட்ரோல்களை எதிர்கொண்ட மீரா
Image Credit : Instagram

ட்ரோல்களை எதிர்கொண்ட மீரா

கடந்த 2023-ம் ஆண்டு விபின் உடனான 3வது திருமணத்தைத் தொடர்ந்து, சமூக ஊடகங்களில் அவர்கள் இருவரும் பல கேலிகளை எதிர்கொண்டனர். இருவரின் வயது வித்தியாசத்தையும், மீராவின் முந்தைய திருமணங்களையும் குறிப்பிட்டு கேலிகள் எழுந்தன. பாலக்காட்டைச் சேர்ந்த விபின், மீரா முக்கிய வேடத்தில் நடித்த 'குடும்பவிளக்கு' உள்ளிட்ட சீரியல்களின் ஒளிப்பதிவாளர் ஆவார். சில ஆவணப்படங்களிலும் அவர் பணியாற்றியுள்ளார். நடிகை மீரா வாசுதேவன் தமிழில் ஜெயம் ரவி நடித்த அடங்கமறு திரைப்படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சினிமா
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved