பிறந்த நாள் ஸ்பெஷல்: நடிகை மீனா பற்றி யாரும் அதிகம் அறிந்திடாத 10 விஷயங்கள்...!!
மீனாவின் பிறந்த நாளான இன்று அவரைப் பற்றி தெரியாத விஷயங்களை பார்க்கலாம் வாருங்கள்...
தமிழரான துரைராஜ், மலையாளியான மல்லிகா தம்பதிகளுக்கு ஒரே மகளாக பிறந்தவர் தான் மீனா.
ஒரு திருமண விழா ஒன்றில் மீனாவை பார்த்த சிவாஜி கணேசன் அவரை குழந்தை நட்சத்திரமாக தனது படத்தில் அறிமுகம் செய்து வைத்தார். “நெஞ்சங்கள்” படம் தான் மீனா குழந்தை நட்சத்திரமாக நடித்த முதல் படம்.
மீனாவிற்கு தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் ஆங்கிலம் என 6 மொழிகள் சரளமாக பேச தெரியும்.
விஜய் கூட மீனா ஷாஜகான் படத்தில் ஒரு பாடலுக்கு ஆடினது மட்டும் தான் பலருக்கும் தெரியும். ஆனால் ஃப்ரெண்ட்ஸ் படத்தில் தேவயானி, ப்ரியமுடன் படத்தில் கெளசல்யா கேரக்டர்களிலும் முதலில் நடிக்கவிருந்தது மீனா தான். ஆனால் கால்ஷீட் பிரச்சனையால் அனைத்தும் கைவிட்டு போனது.
படையப்பா படத்தில் ரம்யா கிருஷ்ணன் செம்ம டெரராக நடித்த நீலாம்பரி கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க வேண்டியது மீனா தானாம். அதுமட்டுமின்றி தேவர் மகன், வாலி என பல சூப்பர் ஹிட் படங்களில் கதாநாயகியாக நடித்திருக்க வேண்டியது.
90ஸ் கிட்ஸ்களின் கனவு கன்னியான மீனா கிட்டத்தட்ட அனைத்து டாப் ஸ்டார்களுடனும் நடித்துவிட்டார். விஜய் கூட ஒரு பாட்டிற்காவது ஆடிவிட்டார். ஆனால் அரவிந்த் சாமியுடன் ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை. ரோஜா படத்தில் நடிக்க வந்த வாய்ப்பை நழுவ விட்டதை எண்ணி இன்று வரை மீனாவிற்கு வருத்தம் இருக்கிறது.
கணவர் வித்யாசாகர் ஒரு இன்ஜினீயர். அவருக்கு பெங்களூரு, சென்னைன்னு ரெண்டு ஊர்கள்லயும் வேலை இருப்பதால், மீனாவும் மாறி மாறி டிராவல் பண்ணிக்கிட்டு, நடிப்பையும் பார்த்துக்கொள்கிறார்.
மீனா மகள் நைனிகா படிப்பில் படுசுட்டி, நடிப்பில் சொல்லவே வேண்டாம் அதை தெறி படத்திலேயே பார்த்துவிட்டோம். ஆனால் செம்ம வாயாடியாம்... யாராவது ஏதாவது கேட்டால் உடனே பதில் கேள்வி கேட்பாராம். அதனால் மீனா அவரை செல்லமாக ‘ரவுடி’ என்று தான் அழைக்கிறார்.
‘பொக்கிஷம்’ திரைப்படத்தில் பத்மப்ரியாவிற்கு பின்னணி குரல் கொடுத்தவர் மீனா என்பது குறிப்பிடத்தக்கது.
16 வயதினிலே, காதலிசம் என இரண்டு இசை ஆல்பங்களில் பாடியுள்ளார் நடிகை மீனா. மேலும், டி இமான் இசையில், சேனா என்ற படத்தில் இன்று இந்த காலையில் என்ற பாடலையும் பாடியுள்ளார் மீனா.