- Home
- Cinema
- கொழு கொழுவென இருந்த கும்கி நாயகியா இது..! திடீரென உடல் எடை குறைந்து ஸ்லிம் லுக்கிற்கு மாறிய லட்சுமி மேனன்
கொழு கொழுவென இருந்த கும்கி நாயகியா இது..! திடீரென உடல் எடை குறைந்து ஸ்லிம் லுக்கிற்கு மாறிய லட்சுமி மேனன்
Lakshmi Menon : விரமாக உடற்பயிற்சி செய்து தனது உடல் எடையை குறைத்துள்ளார் லட்சுமி மேனன். அவர் ஸ்லிம்மான லுக்கில் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

சசிகுமார் நடிப்பில் வெளியான சுந்தரபாண்டியன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் லட்சுமி மேனன். இதையடுத்து பிரபு சாலமன் இயக்கிய கும்கி படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் மிகவும் பேமஸ் ஆனார். இப்படத்தில் அள்ளி என்கிற மலைவாழ் கிராமத்து பெண்ணாக நடித்து அசத்தி இருந்தார்.
இதையடுத்து இவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் குவிந்தன. இதையடுத்து விஷாலுக்கு ஜோடியாக நான் சிகப்பு மனிதன், ஜெயம் ரவிக்கு ஜோடியாக மிருதன் என அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த லட்சுமி மேனனுக்கு நடிகர் அஜித்துடன் நடிக்கும் ஜாக்பாட் வாய்ப்பு ஒன்று கிடைத்தது.
அதன்படி சிவா இயக்கத்தில் வெளியான வேதாளம் படத்தில் நடிகர் அஜித்தின் தங்கையாக நடித்து அசத்தினார். இதன்பின் உடல் எடை கூடியதன் காரணமாக அவருக்கு தமிழில் பட வாய்ப்புகளும் குறையத்தொடங்கின. இதனால் சில ஆண்டுகள் சினிமாவை விட்டு விலகி இருந்த லட்சுமி மேனன், தற்போது மீண்டும் உடல் எடையை குறைத்து ஸ்லிம்மான தோற்றத்துக்கு மாறி உள்ளார்.
இதற்காக தீவிரமாக உடற்பயிற்சி செய்து தனது உடல் எடையை குறைத்துள்ளார் லட்சுமி மேனன். அவர் ஸ்லிம்மான லுக்கில் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன. சினிமாவில் மீண்டும் பட வாய்ப்புகளைப் பிடிப்பதற்காக அவர் ஸ்லிம்மான தோற்றத்திற்கு மாறி உள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்... இயற்கையோடு பயணிக்கும் 'ட்ராவல்ல ஒரு காதல்'... ழகரம் இயக்குனரின் அடுத்த படைப்பு!