அடையாளமே தெரியல... குஷ்பு புகைப்படத்தை பார்த்து ஹன்சிகாவை என கேட்கும் நெட்டிசன்கள்? லேட்டஸ்ட் போட்டோஸ்..!
நடிகை குஷ்பு படு ஸ்லிம் லுக்கிற்கு மாற்றியுள்ள, நிலையில் அவ்வப்போது சோசியல் மீடியாவில் வெளியிடும் புகைப்படங்கள் வேறு லெவலுக்கு உள்ளது. அந்த வகையில் தற்போது குஷ்பு வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்து இது ஹன்சிகா புகைப்படமா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். அந்த புகைப்படங்களின் தொகுப்பு இதோ...
ஏராளமான ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் குஷ்பு. வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் கொடிகட்டி பறந்தவர். அரசியலிலும் திமுக, காங்கிரஸ் கட்சியை தொடர்ந்து தற்போது பாஜகவில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.
டி.வி. நிகழ்ச்சிகள், சினிமா, அரசியல் என படுபிசியாக இருந்தாலும் குஷ்பு பொறுப்பான குடும்பத் தலைவியாக தனது கடமைகளை தவறியதே கிடையாது. சோசியல் மீடியாவில் கூட கணவர் சுந்தர் சி, மகள்கள் அவந்திகா, அனந்திதா பற்றிய அப்டேடுகளையும், குடும்ப புகைப்படங்களையும் பதிவிட்டு வருகிறார்.
kushpoo
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் அண்ணாத்த படத்திலும் நடித்து வருகிறார்.இதில் ரஜினிக்கு குஷ்பு தான் ஜோடி என்றும், இல்லை வில்லி கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்றும் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில் குஷ்பு தன்னுடைய சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
கொழு கொழு லுக்கில் இருந்த குஷ்பு தேர்தலுக்கு முன்பிருந்தே உடல் எடையை குறைக்கும் பணிகளில் தீவிரமாக இறங்கியது பலரும் அறிந்த செய்தி. தற்போது அதன் பலனாக குஷ்பு சிக்கென ஸ்லிம் லுக்கிற்கு மாறியுள்ளார்.
இளம் நடிகைகளுக்கே சவால் விடும் விதமாக, 30 வருடத்திற்கு பார்த்தது போல் மாறி உள்ளார். இதை பார்த்து சில நெட்டிசன்கள் இது ஹன்சிகா போட்டோ தானா யாரை ஏமாத்துறீங்க? என்பது போன்ற கேள்விகளை எழுதி வருகிறார்கள்.