இந்துக்களின் புனித சின்னத்தை இப்படியா அவமதிப்பீங்க?... பிரபல ஆபாச பட நடிகையால் சர்ச்சை...!
மாடல் அழகி மற்றும் ஆபாச படங்களில் நடித்து பிரபலமான கிம் கர்தாஷியான் கம்மல் அணிந்து போஸ் கொடுத்து சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
சர்வதேச அளவில் புகழ் பெற்ற மாடல் அழகியாக வலம் வருபவர் கிம் கர்தாஷியன். 2007ம் ஆண்டு கிம் கர்தாஷியன் சூப்பர்ஸ்டார் எனும் ஆபாச வீடியோ மூலமாக உலகம் முழுவதும் பிரபலமானார்.
அரைகுறை ஆடைகள், நிர்வாண போட்டோ ஷூட், பிகினி என பிரபல பத்திரிகைகளின் அட்டை படங்களுக்கு போஸ் கொடுத்து மாடலாக உருவெடுத்தார். சோசியல் மீடியாக்களில் இவரை மில்லியன் கணக்கான ரசிகர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர்.
உள்ளாடை, அழகு சாதன பொருட்கள் என பல்வேறு தயாரிப்பு நிறுவனங்களை நடத்தில் ஆண்டுக்கு மில்லியன் கணக்கில் கல்லா கட்டி வருகிறார். கிம்கர்தாஷியான் சொத்து மதிப்பு மட்டும் இந்திய மதிப்பில் ரூ.7 ஆயிரத்து 400 கோடி இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.
இவ்வளவு புகழுக்கும், சொத்துக்களும் சொந்தக்காரியாக இருந்தாலும் கிம் கர்தாஷியானால் சோசியல் மீடியாவில் வெடிக்கும் சர்ச்சைகள் ஏராளம். அதுவும் தற்போது இந்துக்களின் மனதை புண்படுத்தும் விதமாக கிம் வெளியிட்டுள்ள போட்டோ சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
தற்போது கிம் கர்தாஷியன் தனது காதில் வடமொழி ஓம் முத்திரையை டிசைனர் கம்மலாக அணிந்து போஸ் கொடுத்துள்ளார். இந்துக்களின் புனித சின்னமான ஓம் முத்திரையை அவமதிக்கும் விதத்தில் நடந்து கொண்டதால் கிம் கர்தாஷியனுக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது.
இந்து மதத்தின் புனிதத்தையும் எங்கள் நம்பிக்கையும் கொச்சைப் படுத்துகின்றீர்கள். புனித முத்திரையை அவமதித்ததற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.