MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • இஸ்லாமியர்களுடன் பக்ரீத் பண்டிகை கொண்டாடிய நடிகை குஷ்பு... வைரலாகும் புகைப்படங்கள்

இஸ்லாமியர்களுடன் பக்ரீத் பண்டிகை கொண்டாடிய நடிகை குஷ்பு... வைரலாகும் புகைப்படங்கள்

நடிகையும், அரசியல்வாதியுமான குஷ்பு பக்ரீத் பண்டிகை கொண்டாடியபோது எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

1 Min read
Author : Ganesh A
| Updated : Jun 29 2023, 01:58 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
khushbu

khushbu

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் குஷ்பு. ரஜினி, கமல், பிரபு, சரத்குமார் என பல்வேறு டாப் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து பிரபலமான குஷ்பு, இயக்குனர் சுந்தர் சி-யை காதலித்து திருமணம் செய்துகொண்டார். 2000-ம் ஆண்டு நடிகை குஷ்புவின் திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்கு பின்னர் சினிமாவை விட்டு விலகிய நடிகை குஷ்பு, அரசியலில் களமிறங்கினார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
khushbu

khushbu

முதலில் திமுக, பின்னர் காங்கிரஸ் போன்ற கட்சிகளில் பணியாற்றிய குஷ்பு, தற்போது பாஜகவில் இணைந்து பணியாற்றி வருகிறார். இவருக்கு பாஜகவில் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக பதவி வழங்கப்பட்டு உள்ளது. அரசியலில் ஆக்டிவாக இருப்பதைப் போல் நடிகை குஷ்பு சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருப்பார். அதில் தன்னை விமர்சிப்பவர்களுக்கு பதிலடி கொடுப்பதில் இருந்து, சொந்த வாழ்வில் நடப்பது வரை அனைத்தையும் பதிவிடுவார் குஷ்பு.

இதையும் படியுங்கள்... அஜித்தின் மச்சினிச்சியா இது? இணையத்தை கலக்கும் ஷாமிலியின் செம்ம ஹாட் போட்டோஸ்

34
khushbu

khushbu

அந்த வகையில், பக்ரீத் பண்டிகை இன்று உலகமெங்கும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், நடிகை குஷ்புவும் பக்ரீத் பண்டிகையை கொண்டாடி உள்ளார். பக்ரீத் பண்டிகையையொட்டி மசூதிக்கு சென்ற நடிகை குஷ்பு அங்கு எடுத்த புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படங்களுக்கு லைக்குகளை அள்ளிக்குவித்து வரும் ரசிகர்கள், அவருக்கு பக்ரீத் வாழ்த்தும் தெரிவித்து வருகின்றனர்.

44
khushbu

khushbu

நடிகை குஷ்பு ஏன் பக்ரீத் பண்டிகை கொண்டாடுகிறார் தெரியுமா, அவரும் ஒரு முஸ்லிம் தான். அவரது ஒரிஜினல் பெயர் நகத் கான். சினிமாவுக்காக தான அவர் தனது பெயரை குஷ்பு என மாற்றிக்கொண்டார். அவரது கணவர் சுந்தர் சி இந்து மதத்தை சேர்ந்தவர் ஆவார். இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்ட பின் எம்மதமும் சம்மதம் என வாழ்ந்து வருகிறார் குஷ்பு.

இதையும் படியுங்கள்... Ethirneechal Serial: எதிர்நீச்சல் சீரியலில் இருந்து விலகும் முக்கிய பிரபலம்.! ஏன்? வெளியான அதிர்ச்சி காரணம்.!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Nayanthara Black Dress: வயசானாலும் குறையாத அழகு.. பிளாக் ட்ரெஸ்ஸில் நயன்தாரா கியூட் க்ளிக்ஸ்!
Recommended image2
Keerthy Suresh: 'நான் ட்ரோல்களை கண்டுகொள்ளவே மாட்டேன்' - கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்!
Recommended image3
Rambha : 6 மாசம் பேசல! நடிகை ரம்பா இவ்வளவு பிடிவாதக்காரியா? அவரே சொன்ன சீக்ரெட்ஸ்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved