21 வயசு முதல்... கடைசி மூச்சு வரை போராடிய தோழி! புகைப்படத்தோடு கீர்த்தி சுரேஷ் போட்ட கண்ணீர் பதிவு!
நடிகை கீர்த்தி சுரேஷ், தன்னுடைய தோழியின் பிறந்தநாளின் அவரோடு எடுத்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு, கனத்த இதயத்துடன் பதிவு ஒன்றை போட்டுள்ளார்.
Keerthy Suresh About Friend:
நடிகைகளை வெளியில் இருந்து பார்க்கும் பலர்... "அவங்களுக்கு என்ன, விதவிதமா மேக்கப் போட்டு நடிச்சு, கோடிகளில் சம்பளம் வாங்குறாங்க. பப் - பார்ட்டினு சுத்தி ஜாலியா இருக்காங்க என நினைப்பார்கள். ஆனால் அவர்களும் ரத்தமும், சதையும் சேர்ந்த நம்மை போன்ற ஒரு சாதாரண மனிதர்கள் தான். அவர்கள் ஒவ்வொரு நாளும் சாதாரண மனிதர்களை விட, தொழில் ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் பல சங்கடங்களை அனுபவிக்க நேர்கிறது என்பதை நினைப்பது இல்லை.
Keerthy suresh Childhood Friend:
அந்த வகையில் தற்போது நடிகை கீர்த்தி சுரேஷ், தன்னுடைய சிறிய வயது தோழி குறித்து மிகவும் உருக்கமாக கண்ணீருடன் பதிவு ஒன்றை போட்டுள்ளார். இதுகுறித்து கீர்த்தி சுரேஷ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தோழியுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு, "கடந்த சில வாரங்களாகவே மிகவும் கடினமாக கடந்து செல்கிறது.
32 ஆண்டுகள் தீரா சாதனைகளும்... ஆரா ரணங்களும்! ரத்தம் சொட்ட சொட்ட வெளியான 'விடாமுயற்சி' போஸ்டர்!
Keerthy suresh Friend Struggle Tumour
என்னுடைய சிறிய வயது தோழி, இவ்வளவு சீக்கிரம் எங்களை விட்டு பிரிந்து சென்றார் என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவளுக்கு 21 வயது இருக்கும் பொது மூலையில் கட்டி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
She is struggling 8 years
அவள் கடந்த மாதம் வரை, கிட்டத்தட்ட 8 வருடங்கள் போராடினார். கடந்த நவம்பர் மாதம் அவளுக்கு மூளையில் மூன்றாவது அறுவை சிகிச்சை நடைபெறும் வரை, அவளை போல் மன உறுதி கொண்ட ஒருவரை நான் பார்த்தது இல்லை.
Keerthy suresh Last meet with Friend:
அவளை நான் கடைசியாக சந்தித்தபோது, இனி இந்த வலியை என்னால் தாங்க முடியாது என்று அழுதாள். நான் அவள் முன் என் உணர்ச்சிகளை வெளிக்காட்டாமல் வைத்திருந்தேன். ஆனால் அவளிடம் பேசிவிட்டு வெளியே வந்தபோது, என்னுடைய கண்ணாடி மற்றும் முகமூடியை அணிந்தபடி மருத்துவமனை நடைபாதை முழுவதும் அழுதேன்.
Heart Broken Moment:
அவள் மயக்கத்தில் இருந்தபோது, நான் அவளை கடைசியாக சந்தித்த தருணத்தை இங்கு குறிப்பிட விரும்பவில்லை. அவள் தன்னுடைய வாழ்க்கையை வாழ துவங்காத பெண், சரியாக இந்த உலகையே பார்க்காத பெண், நிறைவேறாத ஆயிரம் கனவுகளுடன் இருந்த அவளுக்கு ஏன் இப்படி நடந்தது என்று எனக்குள் கேட்டுக்கொண்டேன் ஆனால் பதில் இல்லை.
நெப்போலியன் மகனால் தாம்பத்திய வாழ்க்கையில் ஈடுபட முடியாதா? மயோபதி மருத்துவர் கொடுத்த விளக்கம்!
Birthday Memories:
அவள் தன்னுடைய கடைசி மூச்சு வரை போராடினாள். சரியாக ஒரு மாதத்திற்கு முன்பு இந்த உலகை விட்டு நீ பிரிந்து சென்றாய். மச்சுட்டா உன்னை நினைக்காமல் ஒரு நாளும் எனக்கு போகாது. உன்னுடைய பிறந்தநாளில் இன்றும், என்றென்றும், உன்னை என்னால் மறக்க முடியாது என தெரிவித்துள்ளார்.