- Home
- Cinema
- திருமணத்துக்கு கிரீன் சிக்னல் காட்டிய கீர்த்தி சுரேஷ்... அரசியல்வாதியுடன் விரைவில் டும்டும்டும்?
திருமணத்துக்கு கிரீன் சிக்னல் காட்டிய கீர்த்தி சுரேஷ்... அரசியல்வாதியுடன் விரைவில் டும்டும்டும்?
Keerthy Suresh : தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் பிசியான நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் பரவி வருகிறது.

தயாரிப்பாளர் சுரேஷ் குமார் - நடிகை மேனகா தம்பதியின் மகளான கீர்த்தி சுரேஷ், நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தால் சிறுவயதில் இருந்தே படங்களில் நடித்து வந்தார். தமிழில் இவர் ஹீரோயினாக அறிமுகமான படம், இது என்ன மாயம். ஏ.எல்.விஜய் இயக்கியிருந்த இப்படத்தில் நடிகர் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடித்திருந்தார் கீர்த்தி சுரேஷ்.
இதையடுத்து சிவகார்த்திகேயன் உடன் ரஜினி முருகன், ரெமோ ஆகிய படங்களிலும், தனுஷ் உடன் தொடரி, விஜய்க்கு ஜோடியாக பைரவா, சர்கார் ஆகிய படங்களிலும் நடித்து குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகையாக உயர்ந்தார். தொடர்ந்து கமர்ஷியல் படங்களாக நடித்து வந்த கீர்த்தி சுரேஷுக்கு திருப்புமுனையாம அமைந்த படம் என்றால் அது மகாநடி தான்.
நடிகை சாவித்ரியின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருந்த இப்படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்திருந்தார். இப்படத்தின் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக அவரும் சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் கிடைத்தது. இதன்பின் கமர்ஷியல் படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்த கீர்த்தி சுரேஷ், கதாநாயகிக்கு முக்கியத்துவமுள்ள கதையம்சம் கொண்ட படங்களாக தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்தார்.
இதையும் படியுங்கள்... பிசாசு 2 படத்தில் ஆண்ட்ரியா நிர்வாணமாக நடித்த காட்சியை கத்திரி போட்டு தூக்கிய மிஷ்கின்.... ஏன் தெரியுமா?
அந்த வகையில் இவர் நடித்த பெண்குயின், ரங் டே, மிஸ் இந்தியா, குட்லக் சகி, மரைக்காயர் ஆகிய படங்கள் வரிசையாக தோல்வியைத் தழுவின. இடையிடையே இவர் நடித்த அண்ணாத்த, சர்காரு வாரி பாட்டா போன்ற படங்களும் தோல்வியை தழுவியதால் கீர்த்தி சுரேஷின் கெரியர் கடும் சரிவை சந்தித்தது.
இதனால் அவர் திருமணம் செய்துகொள்ளும் முடிவுக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குடும்பத்தினர் பார்த்த மாப்பிள்ளைக்கும் அவர் சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி அரசியலில் ஈடுபட்டு வரும், தொழிலதிபர் ஒருவரைத் தான் விரைவில் கீர்த்தி சுரேஷ் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் கோலிவுட் வட்டாரத்தில் தகவல் பரவி வருகிறது.
நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணம் குறித்து பலமுறை இவ்வாறு வதந்திகள் பரவி உள்ளன. முதலில் அனிருத்தை அவர் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக கூறப்பட்டது. பின்னர் தொழிலதிபர் ஒருவருடன் திருமணம் நடக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. அப்போதெல்லாம் மறுப்பு தெரிவித்த கீர்த்தி சுரேஷ், தற்போது அரசியல்வாதியை திருமணம் செய்ய உள்ளதாக பரவி வரும் தகவலுக்கு எந்தவித மறுப்பும் தெரிவிக்காததால், இது கிட்டத்தட்ட உறுதியானது போல் தெரிகிறது. இதுகுறித்து விரைவில் அவரே அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்... கடல் நீரில் சொட்ட சொட்ட நனைந்து... கவர்ச்சியில் விளையாடிய சுனைனா! ஹார்ட் டச்சிங் ஹாட் போட்டோஸ்!