- Home
- Cinema
- Keerthy Suresh: கொம்பு வச்ச அழகு ராட்சஷி.. செல்ல குட்டியை கட்டி பிடித்து கீர்த்தி கொண்டாடிய கியூட் கிருத்துமஸ்
Keerthy Suresh: கொம்பு வச்ச அழகு ராட்சஷி.. செல்ல குட்டியை கட்டி பிடித்து கீர்த்தி கொண்டாடிய கியூட் கிருத்துமஸ்
நடிகை கீர்த்தி சுரேஷ் (Keerthy suresh) மிகவும் ஜாலியாக, ஸ்டைலிஷான உடையில்... கிறிஸ்துமஸ் (Christmas celebration photos) கொண்டாடிய கியூட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில், ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.

பன்மொழிப்படங்களில் கலக்கி வரும் கீர்த்தி சுரேஷ் அவ்வப்போது தனது அழகிய புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
அந்த வகையில் இந்த வருட கிறிஸ்துமஸ் தினத்தை, தன்னுடை வீட்டில் செல்ல நாய் குட்டி மற்றும் இன்னும் சிலருடன் சேர்ந்து கொண்டாடியுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது .
தன்னுடைய செல்ல நாய் குட்டி நைக்கை கையில் வைத்து கொண்டு, மான் கொம்பு போன்ற பேன்டு ஒன்றை போட்டு கொண்டு செம்ம கியூட்டாக போஸ் கொடுத்துள்ளார்.
மேலும் சிவப்பு நிற உடையில், வெள்ளை நிற பேன்ட் அணிந்துள்ளார். நைக் அனைவரையும் கவரும் அழகில் உள்ளது. இந்த கிறித்துமஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
நைக்குடன் மட்டும் இன்றி, இன்னும் சிலருடன் எடுத்து கொண்ட புகைப்படங்களையும் கீர்த்தி சுரேஷ் வெளியிட்டுள்ளார்.
கொம்பு வைத்த அழகு ராட்சஷியாக ஜொலிக்கும் கீர்த்தியின் இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது.
படப்பிடிப்பில் எவ்வளவு பிசியாக இருந்தாலும், அவ்வப்போது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக இது போன்ற புகைப்படங்களையும் கீர்த்தி சுரேஷ் வெளியிட தவறுவது இல்லை.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.