குடும்பத்துடன் ஓணம் கொண்டாடிய கீர்த்தி சுரேஷ்... க்யூட் பேமிலி போட்டோக்களுக்கு குவியும் லைக்ஸ்...!
லாக்டவுனில் குடும்பத்துடன் ஜாலியாக ஓணம் கொண்டாடி மகிழ்ந்த கீர்த்தி சுரேஷுக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
விக்ரம் பிரபுவுடன் “இது என்ன மாயம்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானாலும், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் படம் தான் கோலிவுட்டில் டாப் ஹீரோயின் அந்தஸ்திற்கு உயர்ந்தவர் கீர்த்தி சுரேஷ்.
தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரெமோ படத்தில் செம பப்ளியாக நடித்து இளைஞர்களை கொள்ளையடித்தார். சீமராஜா படத்திலும் ராஜா சிவகார்த்திகேயனுக்கு ராணியாக நடித்திருந்தார்.
தளபதி விஜய்யுடன் பைரவா, சர்கார் படத்திலும் நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
நடிகர் திலகம் சாவித்ரியாகவே மாறி கீர்த்தி சுரேஷ் நடித்த மகாநடி திரைப்படம் அவருக்கு தேசிய விருதைப் பெற்றுத் தந்து. ஆரம்பத்தில் அவருடையை சிரிப்பை வைத்து கிண்டல் செய்த பலருக்கும், தனது நடிப்பால் பதிலடி கொடுத்தார்.
கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் தயாரிப்பில் அமேசான் பிரைமில் வெளியான கீர்த்தி சுரேஷின் பெண்குயின் திரைப்படத்தில் அவருடைய நடிப்பு பெரிதும் வரவேற்கப்பட்டது.
இறுதியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். தற்போது அந்த படத்தின் ஷூட்டிங் கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது.
அதனால் வீட்டில் பெற்றோர் மற்றும் தனது செல்ல நாய்குட்டிகளுடன் பொழுதை கழித்து வரும் கீர்த்தி சுரேஷ், தனது உடற்பயிற்சி போட்டோக்களையும் பதிவிட்டு வருகிறார்.
தற்போது தனது பெற்றோர் மற்றும் குடும்பத்தினருடன் கொண்டாட்டமாக ஓணம் கொண்டாடியுள்ள கீர்த்தி சுரேஷ் அந்த புகைப்படங்களை தனது சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார்.
பார்க்க ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ள கீர்த்தி சுரேஷை இந்த குடும்ப புகைப்படத்தில் தேடி தான் கண்டுபிடிக்க வேண்டியுள்ளது.
லாக்டவுனில் குடும்பத்துடன் ஜாலியாக ஓணம் கொண்டாடி மகிழ்ந்த கீர்த்தி சுரேஷுக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.