ஸ்லிம் ஃபிட் லுக்கில்... மாடர்ன் ட்ரெஸ்ஸில் நகை போட்டு அசத்தும் கீர்த்தி சுரேஷ்!! கிக் ஏற்றும் ஹாட் போட்டோஸ்!!
நடிகை கீர்த்தி சுரேஷ், பிரபல நகை விளம்பரத்தில் நடித்த போது எடுத்த புகைப்படங்களை தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியிட வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் போது, கொழு கொழு வென்று இருந்தார். ஆனால் 'மகாநடி' படத்திற்கு பின் தன்னுடைய உடல் எடையை குறைத்து பாலிவுட் திரையுலகில் நடிக்க சென்றார். ஆனால் ஒரு சில காரணங்களால் பாலிவுட் படத்தில் நடிக்க முடியாமல் போகவே, மீண்டும் தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாகவும் கதையின் நாயகியாகவும் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.
பல இயக்குனர்கள் அடுத்தடுத்து இவரிடம் கதை கூறி வந்தாலும், கதைக்கும், தன்னுடைய கதாபாத்திரத்துக்கும் முக்கியத்துவம் இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொண்டு மட்டுமே கீர்த்தி படத்தில் நடிக்க சம்மதிக்கிறார்.
அந்த வகையில் தற்போது இவரது கைவசம், தமிழில் சாணி காகிதம் உட்பட, ஒரு தமிழ் படம் மற்றும் ஒரு மலையாள படம் உள்ளது. அதே போல், இவர் நடித்து முடித்துள்ள 'மரைக்காயர்' , 'குட் லக் சகி' மற்றும் 'அண்ணாத்த' ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாக தயாராக உள்ளது.
சோசியல் மீடியா குயினாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ், அவ்வப்போது ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள், எங்காவது வெளியில் செல்லும் போது எடுத்து கொண்ட புகைப்படங்கள், மற்றும் தன்னுடைய மாடலிங் புகைப்படங்களை வெளியிட்டு... ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வருகிறார்.
அந்த வகையில் பிரபல நகை கடை விளம்பரத்தில் மாடர்ன் உடையில் தோன்றி அசரடித்திருந்தார். ஸ்லிம் ஃபிட் லுக்கில் நகை போட்டாலும், போடாமலும், வேற லெவல் அழகில் தெறிக்கவிட்டார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.