- Home
- Cinema
- புதிய புல்லட்டில் சும்மா சோக்கா... கெத்து காட்டும் நடிகை கனிகா! ஹீரோயின் லுக்கில் அசத்தும் வேற லெவல் போட்டோஸ்!
புதிய புல்லட்டில் சும்மா சோக்கா... கெத்து காட்டும் நடிகை கனிகா! ஹீரோயின் லுக்கில் அசத்தும் வேற லெவல் போட்டோஸ்!
கோலிவுட் திரையுலகில், டப்பிங் ஆர்டிஸ்ட்டாகவும், நடிகையாகவும் அறியப்படும் நடிகை கனிகா (Kaniha) இதுவரை, புல்லட்டில் அமர்ந்தபடி செம்ம ஸ்டைலிஷாக வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

நடிகர் பிரசன்னா ஹீரோவாக அறிமுகமான, '5 ஸ்டார்' படத்தின் மூலம் நடிகையாக தன்னுடைய திரையுலக பயணத்தை துவங்கியவர் கனிகா. இந்த படத்தை தொடர்ந்து, எதிரி, ஆட்டோகிராப், டான்சர், வரலாறு உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார்.
தமிழ் படங்களை தவிர, தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழி படங்களிலும் கவனம் செலுத்த துவங்கினார்.....
தமிழில் அஜித்துக்கு ஜோடியாக நடித்தும் இவரால் முன்னணி நடிகை என்கிற இடத்தை பிடிக்க முடியவில்லை. ஆனால் மலையாள மொழி படங்கள் இவருக்கு கை கொடுத்தது. தொடர்ந்து பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார்.
பின் கடந்த 2008-ஆம் ஆண்டு ஷியாம் என்பவரைத் திருமணம் செய்தார். இத்தம்பதியருக்கு சாய் ரிஷி என்ற மகன் உள்ளார். நீண்ட இடைவெளிக்கு பின், நடிகர் விக்ரம் நடித்து வரும் 'கோப்ரா', மற்றும் 'யாதும் ஒரே யாவரும் கேளீர்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
தற்போது இவர் மிகவும் ஸ்டைலிஷாக புல்லட்டில் அமர்ந்தபடி எடுத்து கொண்ட புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.