ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட், பட்டுப்புடவையில் சொக்க வைக்கும் காஜல் அகர்வால்... கடை திறப்பு விழாவில் கலக்கிய புகைப்படங்கள்...!

First Published Dec 13, 2019, 6:56 PM IST

கதாநாயர்கள் 60 வயது ஆனாலும் ஹீரோக்களாக ரவுண்ட் அடிக்கும் திரைத்துறையில், ஹீரோயின்கள் மட்டும் ஒரே படத்தில் கூட காணாமல் போய்விடுகின்றனர். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் காஜல் அகர்வால், தொடர்ந்து 10 வருடங்களுக்கும் மேலாக கதாநாயகியாக நடித்து வந்தார் காஜல் அகர்வால். தமிழில் அஜித், விஜய், கார்த்தி, சூர்யா என்றும், தெலுங்கில் மகேஷ் பாபு, ராம் சரண் என்றும் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு வந்தார். தற்போது இந்தியன் 2 படத்தில் கமல் ஹாசன் நடிக்க உள்ளார். 

 

தொடர்ந்து சீனியர் நடிகர்களுக்கு ஜோடி சேர்ந்து வருவதால், இளம் நடிகர்கள் படங்களில் நடிக்க வாய்ப்பு வருவதும் குறைந்து விட்டதாம். இதனால் தான் அம்மணி கொஞ்சம் நஞ்சம் பட வாய்ப்பு இருக்கும்போதே, கெத்தா... ஒருவரை பார்த்து திருமணம் செய்து கொள்ள முயற்சி செய்து வருகிறாராம். மேலும் காஜலுக்கு பெற்றோரும் தீவிரமாக மாப்பிள்ளை வேட்டை நடத்தி வருகிறார்களாம். 

 

இந்நிலையில் ஆந்திர மாநிலம் குண்டூரில் நடைபெற்ற மால் திறப்பு விழாவில் பங்கேற்ற காஜல் அகர்வால் ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட், பட்டுப்புடவை சகிதமாக அளவான கவர்ச்சியில் வந்து ரசிகர்களை கிறங்கடித்துள்ளார். அந்தப் புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.