நடிகை காஜல் அகர்வாலுக்கு ரகசிய நிச்சயதார்தமா? மாப்பிள்ளை பற்றி கசிந்தது தகவல்..!
தமிழ் சினிமாவில், 30 வயதை கடந்த நடிகைகளில் ஒருவரான காஜல் அகர்வாலுக்கு இந்த லாக் டவுன் நேரத்தில் ரகசிய நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளதாக ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு திரையுலகிலும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் காஜல் அகர்வால்.
தமிழில் சூர்யா, விஜய், தனுஷ், அஜித், என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
சமீப காலமாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
தற்போது உலக நாயகன் கமல் ஹாஸன் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகை காஜல் அகர்வாலுக்கு ரகசியமாக நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளதாக தெலுங்கு திரை வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.
ஆனால் இந்த தகவல் குறித்து காஜல் அகர்வால் தரப்பில் இருந்து உறுதி படுத்தவில்லை. எனவே இந்த தகவல் உண்மையானதா, அல்லது வதந்தியா என்பது இனி தான் தெரியவரும்.