திருமண நிச்சயதார்த்தம் செய்து கொண்ட ஜனனி – வருங்கால கணவர் புகைப்படம் வெளியீடு!
Janani Engagement With Sai Roshan Shyam : நடிகை ஜனனிக்கும் சாய் ரோஷன் ஷியாமிற்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. இது தொடர்பான புகைப்படங்களை ஜனனி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

நடிகை ஜனனி திருமண நிச்சயதார்த்தம்
Janani Engagement With Sai Roshan Shyam : நடிகை ஜனனிக்கும் சாய் ரோஷன் ஷியாமிற்கும் இன்று திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. திருமண நிச்சயதார்த்தம் செய்து கொண்ட புகைப்படங்களை ஜனனி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஜனனி மற்றும் சாய் ரோஷன் ஷியாமை பார்க்கும் போது இருவருக்கும் ஜோடி பொருத்தம் சூப்பராக இருக்கிறது. சென்னையில் பிறந்து வளர்ந்தவர் நடிகை ஜனனி. கோபாலபுரத்தில் பள்ளி படிப்பை முடித்த ஜனனி, சவீதா இன்ஜினியரிங் கல்லூரியில் பிஇ கம்யூட்டர் சயின்ஸ் படித்துள்ளார்.
ஜனனி சாய் ரோஷன் ஷியாம் திருமண நிச்சயதார்த்தம்
யுஜிக்கு பிறகு ஆஸ்திரேலியாவில் உள்ளா வொல்லொங்காங் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் பெற சீட் கிடைத்துள்ளது. ஆனால், அவர் ஆஸ்திரேலியா செல்லவில்லை. படிக்கும் திட்டத்தையும் கைவிட்டுள்ளார். அப்போது தான் அவருக்கு அவன் இவன் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆரம்பம் முதலே ஜனனி ஐயர் என்று அழைக்கப்பட்ட அவர், தனது பெயரிலிருந்த ஐயர் என்பதை நீக்கி ஜனனி என்று மாற்றிக் கொண்டார்.
ஜனனி மாடலிங் துறை
படிப்பிற்கு பிறகு அவர் மாடலிங் துறையில் களமிறங்கினார். கிட்டத்தட்ட 150க்கும் அதிகமான விளம்பரங்களில் நடித்துள்ளார். அப்படித்தான் அவர் திரு திரு துரு துரு என்ற படத்தில் நடித்தார். இந்தப் படத்தில் அவரது கதாபாத்திரம் பேசப்படவில்லை. இதே போன்று விண்ணைத்தாண்டி வருவாயா படத்திலும் நடித்தார். இந்தப் படமும் பெரிதாக பேசப்படவில்லை.
அவன் இவன் ஜனனி
அதன் பிறகு தான் அவன் இவன் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்தார். இதைத் தொடர்ந்து பாகன், தெகிடி, 7ஆம் நாள், அதே கண்கள், முப்பரிமாணம், தர்மபிரபு, பாகீரா, இப்படிக்கு காதல், ஹாட் ஸ்பாட் என்று பல படங்களில் நடித்துள்ளார். தற்போது தொல்லைக்காட்சி, யாக்கை திரி, முன்னரிவான் என்று பல படங்களில் நடித்து வருகிறார். தமிழ் மட்டுமின்றி மலையாள மொழிகளிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். சின்னத்திரையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தமிழ் சீசன் 2 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார்.
ஜனனி நிச்சயதார்த்த போட்டோஸ்
வெப் சீரிஸிலும் நடித்துள்ளார். இந்த நிலையில் தான் ஜனனி தனது எக்ஸ் பக்கத்தில் தனக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். வருங்கால கணவரின் பெயர் சாய் ரோஷன் ஷியாம் என்று குறிப்பிட்டுள்ளார். இவரைப் பற்றிய மற்ற விவரங்கள் எதுவும் தெரியவில்லை. எனினும், இருவருக்கும் கெமிஸ்டரி ரொம்பவே சூப்பராக இருக்கிறது என்று பலரும் கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.