Genelia: குழந்தை பெற்ற பின்பும் செம்ம ஹாட்? லோ நெக் ஜாக்கெட்டில் இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் ஜெனிலியா!
நடிகை ஜெனிலியா இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் விதமாக, குறையாத அழகில்... லோ நெக் ஜாக்க்கெட் அணிந்து விதவிதமான சேலையில் வெளியிட்டுள்ள புகைப்படங்களின் தொகுப்பு இதோ...
திரையுலகைப் பொறுத்தவரை சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் ரசிகர்களின் மனதில் என்றுமே நீங்காத இடம் பிடித்திருக்கும் நடிகைகள் ஒரு சிலர் மட்டுமே உண்டு. அப்படி தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் ஜெனிலியா.
தமிழில் பாய்ஸ் படம் மூலமான அறிமுகமான ஜெனிலியா. அதன் பின்னர் விஜய்யுடன் சச்சின், ஜெயம் ரவியுடன் சந்தோஷ் சுப்ரமணியம் என பார்த்து பார்த்து தேர்வு செய்த கதாபாத்திரங்கள் மூலமாக ரசிகர்களின் மனம் கவர்ந்தார்.
தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்த ஜெனிலியா பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை திருமணம் செய்து கொண்டு மும்பையில் செட்டில் ஆகிவிட்டார். ஜெனிலியா, ரித்தேஷ் தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
திருமணத்திற்கு பிறகு அவ்வளவாக திரைப்படங்களில் தோன்றாமல் இருந்த ஜெனிலியா ஒரு சில இந்தி மற்றும் மராத்தி திரைப் படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார்.
அதுமட்டுமின்றி சோசியல் மீடியாவில் படுபிசியாக இருக்கும் ஜெனிலியா அவ்வப்போது தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை ஷேர் செய்து வந்தார்.
இரண்டு குழந்தைக்கு தாயான பின்பு மீண்டும் படங்களில் நடிக்க திட்டமிட்டுள்ள ஜெனிலியா குட்டை பாவாடை, ஹாட் கவுன் என விதவிதமாக போட்டோ ஷூட்களை நடத்தி ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளார்.
இதை தவிர்த்து சில நேரங்களில், அழகிய சேலையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படம் வெளியிடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார்.
அந்த வகையில் தற்போது கருப்பு நிற, சேலையில் லோ நெக் ஜாக்கெட் போட்டு... இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் விதமாக இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.