Divya Bharti: திவ்யபாரதியை விட அவங்க அம்மா கியூட்டாக இருக்காங்களே...வைரலாகும் இளம் நடிகையின் அம்மா புகைப்படம்!
Divya Bharti Mother Birthday Photos Viral: இளம் நடிகை திவ்யபாரதியின் அம்மாவின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையடுத்து, திவ்யபாரதியை விட அவங்க அம்மா கியூட்டாக இருப்பதாக நெட்டிசன்கள் கமெண்ட் பதிவு செய்து வருகின்றனர்.
divya bharti
இளம் நடிகை திவ்யபாரதியின் அம்மாவின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையடுத்து, திவ்யபாரதியை விட அவங்க அம்மா கியூட்டாக இருப்பதாக நெட்டிசன்கள் பதிவு செய்து வருகின்றனர்.
divya bharti
சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் கடந்தாண்டு வெளியான "பேச்சிலர்" படத்தின் மூலம் அறிமுகமாகி இளசுகளை சுண்டி இழுத்தவர் திவ்யபாரதி. இப்படத்தில் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக சுப்பு என்கிற துணிச்சலான மாடர்ன் பெண் வேடத்தில், நடித்து இருந்தார். இந்த படத்தில் இவரது நடிப்புக்கு வரவேற்ப்பு கிடைத்தது.
divya bharti
இதையடுத்து தற்போது அவருக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. திவ்ய பாரதி பிக்பாஸ் சீசன் 3 வெற்றியாளர் முகென் ராவ்வுக்கு ஜோடியாக நடித்த மதில் மேல் காதல் என்கிற திரைப்படம் தயாராகி உள்ளது. மேலும், திவ்ய பாரதி இஷ்க் என்கிற மலையாள படத்தின் தமிழ் ரீமேக் படத்தில், பிகில் பட நடிகர் கதிருக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து முடித்துள்ளார்.
divya bharti
இதுதவிர தற்போது ஆரிக்கு ஜோடியாக ஒரு வெப் தொடரையும் கைவசம் வைத்துள்ளாராம். தற்போது, இவருக்கு தமிழ் சினிமாவில் மவுசு கூடி கொண்டே வருகிறது. இதையடுத்து, இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும், திவ்ய பாரதி அவ்வப்போது தனது பக்கத்தில் கிளாமர் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இவர் வெளியிடும் கவர்ச்சி புகைப்படங்களுக்கு மவுசு அதிகம். இந்த இளம் கனவு கன்னிக்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் உள்ளது.
divya bharti
இந்த நிலையில், சமீபத்தில் தனது அம்மாவின் பிறந்த நாளை கொண்டாடிய திவ்ய பாரதி அம்மாவுடன் இருக்கும் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டிருந்தார். இந்த புகைப்படங்களுக்கு தற்போது லட்சக்கணக்கில் லைக்ஸ் குவிந்து வருகிறது. அதுமட்டுமின்றி, திவ்யபாரதியின் அம்மாவே ஹீரோயின் போல அழகாக இருப்பதாக நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.