வாவ் !! நீங்க இப்படி இருந்த தான் வேற லெவல் அழகு... நடிகை அஞ்சலியிடம் ஏற்பட்ட திடீர் மாற்றம்...!
ஓவர் உடல் பயிற்சி செய்து உடலை ஒல்லி குச்சி போல் மாற்றி வைத்திருந்த நடிகை அஞ்சலி, இதெல்லாம் சரி பட்டு வராது என நினைத்து மீண்டும்... கொஞ்சம் உடல் எடையை ஏற்றியுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்களை கவர்ந்துள்ளது.
தெலுங்கு படங்களிலும், சில விளம்பரங்களிலும் தலை காட்டி வந்த அஞ்சலி. ராம் எடுத்த "கற்றது தமிழ்" படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
அந்த படத்தில் ஆனந்தி என்ற வேடத்தில் சிறப்பாக நடித்ததற்காக அஞ்சலிக்கு சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம் பேர் விருது கிடைத்தது.
அதற்கடுத்து "அங்காடி தெரு", "எங்கேயும் எப்போதும்", "இறைவி", "தம்பி வெட்டோத்தி சுந்தரம்", "கலகலப்பு", "சேட்டை", "வத்திக்குச்சி" உள்ளிட்ட படங்களில் தனது சிறப்பான நடிப்பால் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார்.
ஆரம்பத்தில் குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து வந்த அஞ்சலி, இடையில் கவர்ச்சியில் அதகளம் செய்யும் கதாபாத்திரங்களிலும் தாராளம் காட்டி ரசிகர்களை கிறங்கடித்தார். இடையில் நடிகர் ஜெய் உடனான காதல் வதந்திகளால் தமிழ் படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொண்ட அஞ்சலி, தெலுங்கில் மட்டும் கவனம் செலுத்தி வந்தார்.
சமீபகாலமாக உடல் எடை கூடி கொழுக்கு, கொழுக்கு என சும்மா கும்முனு மாறிப்போன அஞ்சலியின் நிலை படங்களில் ஐட்டம் சாங்க்ஸ் ஆடும் அளவிற்கு மாறியது.
அதனால் உடல் எடையைக் குறைக்க தீர்மானித்த அஞ்சலி, தீவிர உடற்பயிற்சிகளைச் செய்து உடல் எடையை கணிசமாக குறைத்துள்ளார்.
ஸ்லிம் லுக்கிற்கு மாறி என்ன செய்ய, பட வாய்ப்புகள் வருவதாக தெரியவில்லை.
மூத்த நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்க வந்த வாய்ப்பையும் அவர் ஏற்கவில்லை.
சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான வக்கீல் சாப் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தாலும், அஞ்சானுக்கு ஹீரோயின் வாய்ப்புகள் கைக்கு எட்டவில்லை.
ஓவர் ஒல்லியாக மாறியதால் தான் பட வாய்ப்பு கை நழுவுகிறது என்று இவருடைய நெருங்கிய வட்டாரத்தை சேர்ந்தவர்கள் அறிவுரை கூறியதை தொடர்ந்து, மீண்டும் தன்னுடைய உடல் எடையை கூட்டியுள்ளார்.
தற்போது மிதமான அழகில் ஜொலிக்கிறார் அஞ்சலி
இவரது இந்த அதிரடி மாற்றத்தை கண்ட ரசிகர்கள் இது தான் உங்களுக்கு அழகு என புகழ்ந்து வருகிறார்கள்.