MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Anjali Nair marriage : ரகசியமாக இரண்டாவது திருமணம் செய்துகொண்ட ‘அண்ணாத்த’ பட நடிகை... உதவி இயக்குனரை மணந்தார்

Anjali Nair marriage : ரகசியமாக இரண்டாவது திருமணம் செய்துகொண்ட ‘அண்ணாத்த’ பட நடிகை... உதவி இயக்குனரை மணந்தார்

சிவா - ரஜினிகாந்த் கூட்டணியில் கடந்தாண்டு வெளியான அண்ணாத்த படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகை அஞ்சலி நாயர் (Anjali Nair), உதவி இயக்குனரை மணந்துள்ளார்.

1 Min read
Author : Ganesh A | Asianet News
Published : Feb 20 2022, 11:17 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

மலையாள திரையுலகில் முன்னணி குணச்சித்திர நடிகையாக இருப்பவர் அஞ்சலி நாயர் (Anjali Nair). தமிழில் கடந்த 2010-ம் ஆண்டு வெளியான நெல்லு படம் மூலம் நடிகையாக அறிமுகமான இவர், இதையடுத்து கோட்டி, உன்னையே காதலிப்பேன் போன்ற படங்களில் நடித்தார். இந்த படங்கள் அவருக்கு எதிர்பார்த்த வெற்றியை கொடுக்காததால், மலையாள திரையுலகுக்கு சென்றார்.

25

அங்கு இவர் நடித்த படங்கள் தொடர்ந்து வெற்றியடைந்ததால் அடுத்தடுத்து இவருக்கு பட வாய்ப்புகளும் குவிந்தன. மம்முட்டி, மோகன்லால் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமடைந்தார். குறிப்பாக ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கடந்தாண்டு வெளியாகி வெற்றிபெற்ற திரிஷ்யம் 2 (drishyam 2) படத்தில் போலீஸ் அதிகாரியாக திறம்பட நடித்து அசத்தி இருந்தார் அஞ்சலி நாயர்.

35

இதுதவிர சிவா - ரஜினிகாந்த் கூட்டணியில் கடந்தாண்டு வெளியான அண்ணாத்த (Annaatthe) படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அஞ்சலி நாயர். தற்போது தமிழில் இவர் கைவசம் மாமனிதன் (Mamanithan) படம் உள்ளது. சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகி உள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

45

இவ்வாறு பிசியான நடிகையாக வலம் வரும் அஞ்சலி நாயர் (Anjali nair), கடந்த 2011-ம் ஆண்டு அனீஷ் என்ற இயக்குனரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 5 வயதில் பெண் குழந்தையும் உள்ளது. 10 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த இத்தம்பதி அண்மையில் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

55

இந்நிலையில், நடிகை அஞ்சலி நாயர் (Anjali Nair), தற்போது அஜித் ராஜு (Ajith Raju) என்பவரை ரகசியமாக இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இவர் சினிமாவில் உதவி இயக்குனராக பணியாற்றி வருகிறார். இத்தம்பதியின் திருமண புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதையும் படியுங்கள்.... BB Ultimate : இனி இது ஒத்துவராது.... பிக்பாஸ் அல்டிமேட்டில் இருந்து திடீரென விலகிய கமல்? - காரணம் இதுதானாம்..!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
படு ஜோராக நடந்த விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா திருமண வரவேற்பு... படையெடுத்து வந்து வாழ்த்திய பிரபலங்கள்
Recommended image2
சந்தேகப்பட்ட சரவணன்... அதிரடி முடிவெடுத்த தங்கமயில்; அதிர்ச்சியில் மீனா - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அப்டேட்
Recommended image3
Chellame Chellame Serial: மறுமணமா? வாய்ப்பே இல்லை! விக்ரமின் அதிரடி பதில் - விஜியைச் சிக்க வைக்கத் துடிக்கும் சுந்தரபாண்டியனின் சதி!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved