அழகில் சொக்க வைக்கும் அஞ்சலி நாயரின் அழகான புகைப்படங்கள்!
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை அஞ்சலி நாயர்

அஞ்சலி நாயர்
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை அஞ்சலி நாயர். மலையாள நடிகையான இவர், சிறந்த மாடலாக வலம் வந்தார். இதன் மூலமாக கடந்த 2019 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் திரைக்கு வந்த நெடுநால்வாடை படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
அஞ்சலி நாயர்
இந்தப் படத்தில் ஹீரோவை துரத்தி துரத்தி காதலிக்கும் ஒரு கிராமத்து கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதன் மூலமாக ரசிகர்களின் அன்பையும், பாராட்டையும் பெற்றார். இந்தப் படத்தைத் தொடர்ந்து டாணாக்காரன் படத்தில் நடித்தார்.
அஞ்சலி நாயர்
இயக்குநர் தமிழ் இயக்கத்தில் விக்ரம் பிரபு, அஞ்சலி நாயர், மதுசூதனன் ராவ், லால், லிவிங்ஸ்டன், போஸ் வெங்கட், எம் எஸ் பாஸ்கர் ஆகியோரது நடிப்பில் கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 8 ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியான படம் டாணாக்காரன். முழுக்க முழுக்க போலீஸ் கதையை மையப்படுத்தி இந்தப் படம் உருவாக்கப்பட்டிருந்தது.
அஞ்சலி நாயர்
தமிழ்நாடு போலீசில் சேருவதற்காக, போலீஸ் ஆட்சேர்ப்பு பள்ளியில் சேர்ந்து பயிற்சி பெறும் நம்ம ஹீரோ அங்கு நடக்கும் அநியாங்களை தட்டி கேட்டு கடைசியில் வெற்றி பெறுகிறார். இந்தப் படத்தில் அஞ்சலி நாயர் போலீஸ் ஆட்சேர்ப்பு பள்ளியில் அங்கு வேலை பார்க்கும் ஒரு பெண் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்து ஹீரோவை காதலித்து வந்தார்.
அஞ்சலி நாயர்
இந்தப் படத்தைத் தொடர்ந்து வந்த எண்ணித் துணிக என்ற படத்தில் நடிகர் ஜெய் உடன் இணைந்து நடித்திருந்தார். இந்தப் படம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 22 ஆம் தேதி திரைக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதில், அதுல்யா ரவி தான் ஹீரோயின். எனினும், இந்தப் படத்தில் பாதிக்கப்பட்டவரின் மனைவி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
அஞ்சலி நாயர்
கடைசியாக இவரது நடிப்பில் காலங்களில் அவள் வசந்தம் என்ற படம் வெளியானது. இந்தப் படம் கடந்த ஆண்டு அக்டோபர் 28 ஆம் தேதி திரைக்கு வந்தது. இந்தப் படத்தில் முன்னணி ரோலில் நடித்து தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தினார்.
அஞ்சலி நாயர்
நெடுநால்வாடை, டாணாக்காரன், எண்ணித் துணிக, காலங்களில் அவள் வசந்தம் ஆகிய படங்களைத் தொடர்ந்து வேறு எந்த தமிழ் படத்திலும் அவர் நடிக்கவில்லை. என்னதான் மலையாள நடிகையாக இருந்தாலும் அவர் தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.