என்ன ‘குட்டி நயன்’ இதெல்லாம்?... அனிகாவின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்டை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்...!
16 வயதிலேயே சினிமா, ஷார்ட் பிலிம்ஸ், மாடலிங் என சகல துறைகளிலும் பட்டையைக் கிளப்பி வருகிறார்.
தமிழில் அஜித்திற்கு மகளாக என்னை அறிந்தால், விஸ்வாசம் படங்களில் நடித்த அனிகாவை ரசிகர்கள் அஜித்தின் ரீல் மகள் என்று தான் அழைக்கிறார்கள்.
பேபி ஷாலினியில் ஆரம்பித்து மீனா மகள் நைனிகா, தெய்வத்திருமகள் சாரா வரை தமிழ் திரையில் ஒரு சில குழந்தை நட்சத்திரங்கள் மட்டுமே ரசிகர்கள் மனதில் ஒட்டிக்கொள்கின்றனர். அதிலும் சிலருக்கு மட்டுமே எதிர்காலத்தில் ஹீரோயினாக வளரும் அளவுக்கு வாய்ப்பு கிடைக்கும். ஆனால் குழந்தை நட்சத்திரமாகவே நடித்தாலும் ரசிகர்கள் மனதில் ஹீரோயின் அளவிற்கு இடம் பிடித்திருப்பவர் அனிகா சுரேந்திரன்.
anikha
கேரள திரையுலகில் மோகன் லால், மம்மூட்டி, ஜெயராம் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் குழந்தை நட்சத்திரமாக வலம் வந்தவர் அனிகா. மலையாளத்தில் 10க்கும் மேற்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.
என்ன தான் குட்டி பாப்பா அனிகா இப்படி போட்டோ போடாதீங்க என விமர்சித்தாலும் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்வோர் எண்ணிக்கை மட்டும் எகிறிக்கொண்டே செல்கிறது.
தமிழில் அஜித்திற்கு மகளாக என்னை அறிந்தால், விஸ்வாசம் படங்களில் நடித்த அனிகாவை ரசிகர்கள் அஜித்தின் ரீல் மகள் என அழைக்கும் அளவிற்கு பிரபலமாகிவிட்டார். அதே போல் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் மினியேச்சர் போலவே இருப்பதால் அனிகாவை குட்டி நயன் என செல்லமாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
தற்போது அனிகா மலையாள படமொன்றின் கன்னட ரீமேக்கில் ஹீரோயினாக அறிமுகமாக உள்ளதாக கூறப்படும் நிலையில், போட்டோ ஷூட்டில் சற்று வித்தியாசம் காட்ட ஆரம்பித்திருக்கிறார்.
16 வயதிலேயே சினிமா, ஷார்ட் பிலிம்ஸ், மாடலிங் என சகல துறைகளிலும் பட்டையைக் கிளப்பி வருகிறார். சமீபத்தில் கவிப்பேரரசு வைரமுத்துவின் ‘நாட்படு தேறல்’ பாடல் தொகுப்பில் அனிகாவின் அசத்தலான நடிப்பு வரவேற்பை பெற்றது.
Anikha
படங்களில் நடித்து வந்தாலும் மாடலிங்கில் டாப் ஹீரோயின்களுக்கே டப் கொடுக்கும் விதமாக பிசியாக வலம் வரும் அனிகா, அங்கு எடுக்கப்படும் கலக்கலான போட்டோக்களை இன்ஸ்டாவில் பதிவேற்றி வருகிறார். அப்படி அனிகா பதிவிடும் சில புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்துவதும் உண்டு.
Anikha
அனிகா லேட்டஸ்டாக நடத்தியுள்ள போட்டோ ஷூட்டில் உடலை இறுக்கிப் பிடித்திருக்கும் குட்டை உடையில் தாறுமாறாக போஸ் கொடுத்து ரசிகர்களை மெர்சலாக்கி இருக்கிறார்.
Anikha
இடையில் சிறிது காலத்திற்கு புடவை, பாவாடை தாவணி, லெஹங்கா சல்வார் என ட்ரெடிஷனல் லுக்கில் வலம் வந்த அனிகா, தற்போது மீண்டும் மார்டன் உடையில் கிளாமர் லுக்கிற்கு தாவியுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Anikha
சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலாகி வரும் அனிகாவின் லேட்டஸ்ட் போட்டோக்களை பார்க்கும் ரசிகர்கள் என்ன குட்டி நயன் இதெல்லாம்? என வேதனையுடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.