MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • சர்ச்சைக்குரிய மும்பை வீடு.. நேக்கா செம லாபத்திற்கு விற்ற கங்கனா ரணாவத் - எத்தனை கோடிக்கு தெரியுமா?

சர்ச்சைக்குரிய மும்பை வீடு.. நேக்கா செம லாபத்திற்கு விற்ற கங்கனா ரணாவத் - எத்தனை கோடிக்கு தெரியுமா?

Kangana Ranaut Sells Mumbai House : மும்பை சில வருடங்களுக்கு முன்பு நடிகை கங்கனா ரணாவத் வாங்கிய வீட்டை அவர் இப்பொது விற்பனை செய்துள்ளார்.

3 Min read
Ansgar R
Published : Sep 10 2024, 04:59 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Kangana Ranaut

Kangana Ranaut

நடிகை கங்கனா ரணாவத் 

ஹிமாச்சலில் பிறந்து, ஹிந்தி மொழி படங்கள் மூலம் திரையுலகில் அறிமுகமான நடிகை தான் கங்கனா ரணாவத். இளம் வயது முதலிலேயே கூட்டுக் குடும்பத்தில் வாழ்ந்து பழகிய நடிகை தான் கங்கனா, இவருடைய தாய் ஒரு பள்ளி ஆசிரியர், அதேபோல இவருடைய தந்தை ஒரு சிறந்த தொழிலதிபராக விளங்கி வந்தார். அதுமட்டுமல்ல கங்கனாவின் கொள்ளு தாத்தா சர்ஜு சிங் ரணாவத் அப்போதே எம்.எல்.ஏ-வாக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

அது மட்டுமல்ல இவருடைய தாத்தா ஒருவர் கூட ஐஏஎஸ் அதிகாரியாக பணிபுரிந்து வந்துள்ளார். இளம் வயது முதலே திரைத்துறை மீது அதிக ஆர்வம் கொண்டிருந்த கங்கனா, கடந்த 2006ம் ஆண்டு வெளியான "கேங்ஸ்டர்" என்கின்ற ஹிந்தி திரைப்படத்தின் மூலம் தனது கலை உலக பயணத்தை தொடங்கினார். அப்போது அவருக்கு வயது 20. தொடர்ச்சியாக பல ஹிந்தி திரைப்படங்களில் நடித்து வந்த கங்கனா, 2008ம் ஆண்டு தமிழில் வெளிய பிரபல நடிகர் ஜெயம் ரவியின் "தாம் தூம்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிலும் நாயகியாக களமிறங்கினார்.

ஆனால் அதன் பிறகு நேரடியாக எந்த தமிழ் திரைப்படத்திலும் நடிக்காத கங்கனா, 2023ம் ஆண்டு பிரபல நடிகர் மற்றும் இயக்குனர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான "சந்திரமுகி" படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து மீண்டும் கோலிவுட் உலகில் என்ட்ரி கொடுத்தார். ஹிந்தி திரை உலகை பொருத்தவரை நான்கு முறை தேசிய விருது வென்ற நடிகையாக திகழ்ந்து வருகிறார் கங்கனா.

குரு vs சிஷ்யன்! அட்லீ படத்துடன் ஒத்தைக்கு ஒத்தையாக மோதும் ஷங்கர் படம் - வெற்றி யாருக்கு?

24
Kangana

Kangana

அரசியல் வருகை 

நேரடியாக எந்த கட்சிக்கும் ஆதரவு தெரிவிக்காமல் இருந்து வந்தாலும், பிரதமர் மோடியின் பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவாளராக தான் கடந்த பல ஆண்டுகளாக பயணித்து வந்தார் நடிகை கங்கனா. தனது சமூக வலைதள பக்கங்களில் மிகவும் ஆக்டிவான நபராக இருந்து வரும் கங்கனா, தான் பயணித்து வரும் பாலிவுட் உலகம் குறித்து அவ்வப்போது சர்ச்சையான சில கருத்துக்களை வெளியிட்டு வந்தார். அது மட்டும் அல்லாமல், பாலிவுட் உலகின் பிரபல நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்கோட் கடந்த 2020 ஆம் ஆண்டு இறந்த பொழுது, முதலமைச்சர் உத்தவ் தாக்ரே மற்றும் அவரது அரசை குற்றம் சாட்டி அவர் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

கடந்த 2021ம் ஆண்டு அவருடைய ட்விட்டர் கணக்கில் தொடர்ச்சியாக சர்ச்சையான கருத்துக்கள் வெளியிடப்பட்டதாக கூறி, 2 ஆண்டுகள் அவருடைய ட்விட்டர் கணக்கு முடக்கி வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த ஜனவரி 2023-ல் தான், மீண்டும் அவர் தனது ட்விட்டர் கணக்கை செயல்படுத்த தொடங்கினார். 

இந்த சூழலில் தான் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் மாண்டி தொகுதியில் போட்டியிட்டு, கங்கனா வெற்றியும் பெற்றார். அவரை மாண்டியா தொகுதியில் எதிர்த்து போட்டியிட்ட முக்கிய எதிர் கட்சியான விக்கிரமாதித்யா சிங் என்பவரை அவர் தோற்கடித்தது குறிப்பிடத்தக்கது. இப்போது எம்பி ஆக பயணித்து வரும் கங்கனா, கடந்த ஜூன் மாதம் 6ம் தேதி விமான நிலையத்திலிருந்து ஒரு CISF கான்ஸ்டபிளால் தாக்கப்பட்டதாக பெரும் பரபரப்புகள் எழுந்தது.

34
Pali Hills House

Pali Hills House

கங்கனாவின் மும்பை வீடு 

விரைவில் திரையில் வெளிவரவிருக்கும் தனது 'எமர்ஜென்சி' படத்திற்காக காத்திருக்கும் கங்கனா, கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பரில் சுமார் 20.7 கோடிக்கு மும்பை நகரில் உள்ள பாலி ஹில் என்ற பகுதியில் ஒரு சொகுசு பங்களாவை வாங்கினார். அதன் பின்னர் 2022ன் ஆண்டு டிசம்பரில் வாக்கில், அந்த வீட்டை வைத்து வங்கியில் சுமார் 27 கோடி ரூபாய் கடன் வாங்கினார் என்றும் கூறப்படுகிறது. மேலும் நடிகை கங்கனா ரணாவத் அந்த வீட்டை தனது அலுவலகமாகப் பயன்படுத்தினார், அதுமட்டுமல்லாமல் அவரது தயாரிப்பு நிறுவனமான மணிகர்னிகா பிலிம்ஸ் நிறுவனத்தையும் அங்கேயே நிர்மாணித்து வந்தார்.

கடந்த 2020ல், அதாவது கங்கனா அந்த வீட்டை வாங்கிய 3 ஆண்டுகள் கழித்து, பிரஹன்மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் (பிஎம்சி), அந்த ஆண்டு செப்டம்பரில், கங்கனாவின் பாந்த்ரா அலுவலகத்தின் சில பகுதிகளை பிஎம்சி, சட்டவிரோத கட்டுமானத்தைக் காரணம் காட்டி இடித்தது. செப்டம்பர் 9 அன்று பம்பாய் உயர்நீதிமன்றம் அதற்கு தடை உத்தரவு பிறப்பித்ததையடுத்து, அந்த இடிப்பு பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

பின்னர் நடிகை கங்கனா, BMCக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்து சுமார் 2 கோடி ரூபாய் இழப்பீடு கோரினார், பிறகு மே 2023ல் அவர் தனது கோரிக்கைகளை வாபஸ் பெற்றார். இந்நிலையில் இப்பொது அந்த வீட்டை அவர் பெரும் தொகைக்கு விற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

44
Actress Kangana

Actress Kangana

தற்போது வெளியிடப்பட்டுள்ள ஆவணங்களில் கூற்றுப்படி, கங்கானாவின் அந்த பங்களா சுமார் 3,075 சதுர அடியில் கட்டப்பட்ட பகுதி என்றும் மற்றும் 565 சதுர அடி பார்க்கிங் இடத்தை அது உள்ளடக்கியது என்றும் கூறப்படுகிறது. மேலும் இப்பொது அவரது அந்த வீட்டை சுமார் 32 கோடி ரூபாய்க்கு இப்பொது விற்பனை செய்துள்ளதாகவும், அந்த பரிவர்த்தனை கடந்த செப்டம்பர் 5, 2024 அன்று அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

தமிழகத்தின் கோயம்புத்தூரில் உள்ள கமாலினி ஹோல்டிங்ஸின் பங்குதாரரான ஸ்வேதா பதிஜா என்பவர் தான் அந்த வீட்டை வாங்கியுள்ளதாக இப்பொது ஆவணங்கள் கூறுகின்றது. 20 கோடி ரூபாய்க்கு சுமார் 7 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய தனது வீட்டை, நடிகை கங்கனா இப்பொது சுமார் 32 கோடிக்கு விற்பனை செய்துள்ளது ஆச்சர்யங்களை ஏற்படுத்தியுள்ளது.

6 வருட தவம்... குழந்தையை மார்போடு அணைத்தபடி தீபிகா படுகோன்! வைரலாகும் போட்டோ!

About the Author

AR
Ansgar R
பிஜேபி
கங்கனா ரனாவத்
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved