- Home
- Cinema
- UAE honours Amala Paul : அட்ரா சக்க... நடிகை அமலா பாலுக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம்! குவியும் வாழ்த்துக்கள்
UAE honours Amala Paul : அட்ரா சக்க... நடிகை அமலா பாலுக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம்! குவியும் வாழ்த்துக்கள்
தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளில் பிசியாக நடித்து வரும் அமலாபாலுக்கு தற்போது மிகப்பெரிய கவுரவம் கிடைத்துள்ளது.

யுஏஇ வழங்கும் கோல்டன் விசா என்பது அவ்வளவு எளிதில் யாருக்கும் கிடைத்துவிடாது. தங்களுடைய துறையில், சிறந்து விளங்குபவர்களுக்கு மட்டுமே இந்த கௌரவத்தை கொடுத்து வருகிறது ஐக்கிய அரபு அமீரகம்.
அந்த வகையில் தற்போது, பல்வேறு பாலிவுட் படங்களிலும், சமூக சேவை பணிகளிலும் ஈடுபட்டு வருபவர்கள், மற்றும் அந்நாட்டில் முதலீடு செய்யும் தொழிலதிபர்கள், திரையுலக நட்சத்திரங்கள் போன்றோருக்கு இந்த விசா வழங்கப்பட்டு வருகிறது.
இந்த விசாவுக்கு பல சிறப்புகள் உள்ளன. கோல்டன் விசா வைத்திருப்பவர்கள், எவ்வித கட்டுப்பாடுகளுமின்றி ஐக்கிய அரபு அமீரகத்தில் தங்கவும், எவ்வித தடையும் இன்றி வேலை செய்யவும் அனுமதிக்கப்படுவார்கள்.
அவர்களும் ஐக்கிய சிட்டிசன்களுக்கு நிகராகவே கருதப்படுவார்கள். இந்த விசா ஒவ்வொருவருக்கும் 5 அல்லது 10 ஆண்டுகள் புதுப்பிக்கும் வகையில் வழங்கப்பட்டு வருகிறது.
ஏற்கனவே இந்த கோல்டன் விசாவை பிரபல பாலிவுட் நடிகர்களான ஷாருக்கான், சஞ்சய் தத் ஆகியோர் வைத்திருக்கின்றனர். அதேபோல் தென்னிந்தியாவில் மலையாள நடிகர்களான மோகன்லால் மற்றும் மம்முட்டி ஆகியோர்களுக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டது.
நடிகைகளை பொறுத்தவரையில் திரிஷா, மீரா ஜாஸ்மின், ஊர்வசி ரவ்துலா ஆகியோர் வைத்திருக்கும் நிலையில், தற்போது நடிகை அமலா பாலுக்கும் கோல்டன் விசா வழங்கப்பட்டு உள்ளது.
இந்த மகிழ்ச்சியான செய்தியை சமூக வலைதளம் வாயிலாக பகிர்ந்துள்ள அமலாபால், கோல்டன் விசா பெற்றபோது எடுத்த புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.