அடேங்கப்பா..சொந்தமா பிளைட் வைத்திருக்கும் நடிகர்கள் யார் யார் தெரியுமா?
விலை உயர்ந்த சொகுசு கார்களை வைத்திருக்கும் பிரபலங்களை நமக்கு தெரியும். இங்கு பாலிவுட் பிரபலங்கள் பலர் சொந்தமாக தனி விமானமே வைத்துள்ளனராம்.

Amitabh bachchan
பிரபல நடிகர் அமிதாபச்சன் :
திரைப்பட நடிகர், திரைப்பட தயாரிப்பாளர், தொலைக்காட்சி தொகுப்பாளர், அவ்வப்போது பின்னணி பாடகர் என மாஸ் காட்டி வரும் பழம்பெரும் நடிகர் அமிதாபச்சன். இவரது மகன் அபிஷேக் பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய் பிரபலமான நடிகர்கள். பல கோடிகளில் புரளும் அமிதாப் சொந்தமாக தனி விமானம் வைத்துள்ளார்.
Akshay Kumar
அக்ஷய் குமார் :
கடந்த 90கள் முதல் இன்று வரை பாலிவுட்டில் கலக்கி வறுவப்பர் அக்ஷய் குமார். இவர் சமீபத்தில் அத்ராங்கி ரே படத்தில் மேஜிக் மேனகா நடித்திருந்தார். இவருடன் நம்ம தனுஷும் இணைந்தார். அதோடு காஞ்சனா படத்தின் இந்தி ரீமேக்கில் அக்ஷய் குமார் மாஸாக நடித்துள்ளார்..பல கோடிகளுக்கு சொந்தமான இவருக்கு தனி விமானம் உள்ளது.
salman khan
சல்மான்கான்:
சல்மான்கானின் முதல் படமான மைனே பியார் கியா (1989) மாபெரும் வெற்றியை தட்டி சென்றது. இதையடுத்து பல வெற்றிகளை குவித்த சல்மான் கான் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவர். இவருக்கு சொந்தமாக தனி விமானம் உள்ளது.
priyanka chopra
பிரியங்கா சோப்ரா :
முன்னாள் உலக அழகியான பிரியங்கா சோப்ரா இவர் கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் வரை கலக்கி வருகிறார். தன்னுடைய 38 வயதிலும் டாப் ஹீரோயினாக உள்ள பிரியங்கா அமெரிக்க பாடகர் நிக் ஜோனசை காதலித்துதிருமணம் செய்து கொண்டார். இவர்கள் தற்போது வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுள்ளனர். இவருக்கு சொந்தமாகவும் தனி விமானம் உண்டு
Ajay Devgn
அஜய்தேவ் கான் :
பாலிவுட்டின் மற்றுமொரு பிரபலம் அஜய்தேவ் கான்.. சம்பளம் அதிகம் பெறும் நாயகர்களில் ஒருவரான இவர் Rudra: The Edge of Darkness படத்தில் நடித்துள்ளார். இவருக்கு சொந்தமாக தனி விமானம் உள்ளது.
Shilpa Shetty:
ஷில்பா ஷெட்டி:
பாலிவுட் பிரபலபமா ஷில்பா ஷெட்டி..தனது நடிப்பால் ரசிகர்களை ஈர்த்துள்ளார். வர் இந்தியில் உள்ள பல்வேறு முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். பல கோடிகளை சம்பளமாக பெரும் இவருக்கு சொந்தமாக பிளைட் உள்ளது.