- Home
- Cinema
- valimai Trailer : அட..இவங்களைத்தான் அஜித் வில்லனாக தேர்ந்தெடுத்தாராம்..வலிமை வாய்ப்பை இழந்த ஹீரோஸ்...
valimai Trailer : அட..இவங்களைத்தான் அஜித் வில்லனாக தேர்ந்தெடுத்தாராம்..வலிமை வாய்ப்பை இழந்த ஹீரோஸ்...
valimai trailer : வலிமை படத்திற்காக அஜித் இரண்டு மாஸ் நடிகர்களை முதலில் கூறியுள்ளார். ஆனால் இயக்குனருக்கு விருப்பம் இல்லாத காரணத்தால் வேறொரு நடிகரை தேர்வு செய்துள்ளனர்.

valimai trailer
போனி கபூர் தயாரிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் அஜித் (Ajith) நடித்துள்ள படம் வலிமை. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷியும், வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயாவும் நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, குக் வித் கோமாளி புகழ் ஆகியோர் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
valimai trailer
இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. பின்னணி இசை உள்ளிட்ட வேலைகளில் படக்குழு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. வலிமை படம் வருகிற பொங்கல் பண்டிகைக்கு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
valimai trailer
வெளியீட்டுக்கு ஒரு மாதமே எஞ்சி உள்ளதால், படத்தின் அப்டேட்டுக்களும் அடுத்தடுத்து வெளியான வண்ணம் உள்ளன. ஏற்கனவே இப்படத்தின் டீசர், பாடல்கள், மேக்கிங் வீடியோ மற்றும் தீம் மியூசிக் ஆகியவை வெளியாகி ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றது.
valimai trailer
இந்த படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரைலர் தற்போது ரிலீஸ் ஆகியுள்ளது. இதில் பைக்கர்ஸை பட்டை உரிக்கும் காவலராக வந்து மாஸ் காட்டுகிறார் அஜித்குமார். நேர்கொண்ட பார்வையில் அஜித்தின் மாஸ் போதவில்லை என நினைத்தவர்களுக்கு சரியான விருந்தாக இந்த படம் அமையும் என்பதை வலிமை ட்ரைலர் வெளிப்படுத்தியுள்ளது.
valimai trailer
இதில் பைக்கர்ஸை பட்டை உரிக்கும் காவலராக வந்து மாஸ் காட்டுகிறார் அஜித்குமார். அஜித்துக்கு இணையான ஸ்டாண்டில் கலக்கியுள்ள வபைக்கர் கிங் யார் என்னும் கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
valimai movie
வலிமை படத்தின் கதையை கேட்ட பிறகு இதில் வில்லனாக நடிக்க முதலில் மாஸ்டர் படத்தில் வில்லன் ரோலில் நடித்து அசத்திய அர்ஜுன் தாஸை முதலில் அஜித் தேர்வு செய்துள்ளார்.
valimai movie
அர்ஜுன் தாஸ் இல்லையேல் பிரபல தமிழ் நடிகர் பிரசன்னாவை வில்லனாக தேர்வு செய்ய அஜித் பரிந்துரை செய்துள்ளார். ஆனால் இந்த இருவரும் வலிமை வில்லன் ரோலுக்கு செட்டாக மாட்டார்கள் என தயரிப்பாளர் கூறியுள்ளார்.
Tovino Thomas
பின்னர் இயக்குனர் வினோத் மலையாள நடிகர் Tovino Thomas -யை வில்லன் ரோலுக்கு தேர்ந்தெடுத்துள்ளார். ஆனால் கால்ஷீட் பிரச்சனை காரணமாக அவர் ஒப்பந்தமாகவில்லை..
valimai karthikeya
இதைதொடர்ந்தே தெலுங்கில் மாஸ் ஹீரோவாக வலம் வரும் கார்த்திகேயா கும்மகொண்டாவை வில்லனாக நடிக்க வலிமை படக்குழு தேர்வு செய்துள்ளது.. இவர் தெலுங்கில் சமீபத்தில் ஆர்எக்ஸ் 100 மற்றும் 90எம்எல் படங்களில் மாஸாக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.