MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Yogi Babu: தீபாவளியன்று இரண்டாவது குழந்தைக்கு தந்தையான யோகி பாபு..! குவியும் வாழ்த்து..!

Yogi Babu: தீபாவளியன்று இரண்டாவது குழந்தைக்கு தந்தையான யோகி பாபு..! குவியும் வாழ்த்து..!

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக இருக்கும் யோகி பாபுவுக்கு இன்று காலை அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. இதை தொடர்ந்து பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். 

1 Min read
Author : manimegalai a
Published : Oct 24 2022, 08:53 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Yogi babu

Yogi babu

தமிழ் திரையுலகில் தன்னுடைய எதார்த்தமான காமெடி சென்ஸ் மூலம், மிக குறுகிய காலத்திலேயே பிரபலமான காமெடி நடிகராக உருவெடுத்தவர் யோகி பாபு. சமீப காலமாக அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களிலும் யோகி பாபுவின் காமெடி காட்சிகள் இடம்பெற்று வருகிறது. முன்பெல்லாம் எப்படி முன்னணி நடிகர்களின் படங்களில் வைகை புயல் வடிவேலுவை கமிட் செய்தார்களோ... அதே போல், யோகி பாபுவையும் பல இயக்குனர்கள் கமிட் செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.

25

காமெடி நடிகர் என்பதை தாண்டி, பல இயக்குனர்கள் இவரை ஹீரோவாக வைத்து படம் இயக்கவும் தயாராக இருந்தாலும், வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு படங்களில் மட்டுமே கதையின் நாயகனாக நடிப்பேன். மற்ற படங்களில், காமெடி வேடத்தில் மட்டுமே நடிப்பேன் என, கண்டீஷன் போட்டு நடித்து வருகிறார். 

மேலும் செய்திகள்: 2-வது மனைவியையும் விவாகரத்து செய்தார் பாலா... ஒரே ஆண்டில் முடிவுக்கு வந்த திருமண வாழ்க்கை
 

35

இந்நிலையில் இவருக்கும், பார்கவி என்கிற பெண்ணுக்கும் கடந்த 2020 ஆம் ஆண்டு, மிகவும் எளிமையாக திருமணம் நடந்த நிலையில், திருமண வரவேற்பை பிரமாண்டமாக செய்ய யோகி பாபு திட்டமிட்டிருந்தார், ஆனால் அப்போது கொரோனா அதிகம் பரவியதால், முழு ஊரடங்கு போடப்பட்டது எனவே திருமண வரவேற்பும் நடத்தமுடியாத சூழ்நிலை உருவானது.

45

திருமணம் ஆன அதே ஆண்டு, டிசம்பர் மாதம்... யோகி பாபு - பார்கவி தம்பதிக்கு விசாகன் என்கிற மகன் பிறந்த நிலையில், தற்போது இரண்டாவது குழந்தைக்கும் தந்தையாகியுள்ளார் யோகி பாபு.

மேலும் செய்திகள்: பாதியில் விலகிய ஜிபி முத்து... அவருக்கு பதில் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்லப்போகும் போட்டியாளர் யார் தெரியுமா?
 

55

தீபாவளி திருநாளான இன்று காலை, சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் இவருக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. தீபாவளி தினத்தில் திருமகளை பெற்றெடுத்த யோகி பாபுவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
யோகி பாபு

Latest Videos
Recommended Stories
Recommended image1
கார்த்திகை தீபம் இன்றைய கூத்து: லாஜிக் மீறிய புதையல் வேட்டை! சந்திரகலா விரித்த வலையில் சிக்குவது யார்?
Recommended image2
லாஜிக் இல்லா மேஜிக் – புதையலை வைத்து டிராமா போட்ட இயக்குநர் – சந்திரகலாவின் டபுள் மாஸ்டர் பிளான் – கார்த்திகை தீபம்!
Recommended image3
விஜியை குறிவைக்கும் சுந்தரபாண்டியன் - லாவண்யா கூட்டணி! நடுவில் சிக்கித் தவிக்கும் விஜி - செல்லமே செல்லமே அதிரடி!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved