MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Magudam OTT Release : தியேட்டரில் வாஷ் அவுட் ஆன விஷாலின் மகுடம்.... ஓடிடியில் எப்போ ரிலீஸ் ஆகிறது?

Magudam OTT Release : தியேட்டரில் வாஷ் அவுட் ஆன விஷாலின் மகுடம்.... ஓடிடியில் எப்போ ரிலீஸ் ஆகிறது?

Magudam Movie OTT Release Date : விஷால் முதன்முறையாக இயக்கி, ஹீரோவாக நடித்த மகுடம் திரைப்படம் எப்போது ஓடிடியில் ரிலீஸ் ஆகும் என்பதைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Aug 26 2026, 04:25 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Magudam OTT Release
Image Credit : X

Magudam OTT Release

தமிழ் சினிமாவில் ஆக்‌ஷன் ஹீரோவாக தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கியவர் விஷால். ‘திமிரு’, ‘சண்டக்கோழி’, ‘துப்பறிவாளன்’, ‘இரும்புத்திரை’ என பல படங்கள் மூலம் ஆக்‌ஷன் மற்றும் கமர்ஷியல் கதைகளில் தனக்கென ஒரு இடத்தை அவர் பிடித்துள்ளார். இந்த நிலையில், நடிப்புடன் சேர்த்து முதல் முறையாக இயக்குநர் பொறுப்பையும் ஏற்று விஷால் உருவாக்கிய திரைப்படம் ‘மகுடம்’. படம் அறிவிக்கப்பட்டது முதலே விஷாலின் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இருந்து வந்தது. குறிப்பாக இப்படத்தில் அவர் இரட்டை வேடங்களில் நடித்திருப்பது கூடுதல் கவனத்தை ஏற்படுத்தியது.

கடந்த ஆகஸ்ட் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியான ‘மகுடம்’ படத்தில் விஷாலுடன் அஞ்சலி, துஷாரா விஜயன், ஜான் விஜய் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வெளியான பிறகு ‘மகுடம்’ திரைப்படத்திற்கு எதிர்பார்த்த அளவிலான வரவேற்பு கிடைக்கவில்லை. குறிப்பாக படத்தின் நீளம், பல்வேறு காலகட்டங்களில் பயணிக்கும் கதை மற்றும் சில இடங்களில் மெதுவாக நகரும் திரைக்கதை ஆகியவை விமர்சனங்களுக்கு உள்ளாகின. சுமார் 3 மணி நேரம் 5 நிமிடங்கள் ஓடும் இப்படத்தின் கதையை இன்னும் சுருக்கமாகவும் வேகமாகவும் சொல்லியிருக்கலாம் என்பது ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் கருத்தாக இருந்தது.

Magudam Review : இயக்குநராக ஜெயித்தாரா விஷால்? மகுடம் ட்விட்டர் விமர்சனம் இதோ

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
வசூலில் பெரிய பின்னடைவு?
Image Credit : X

வசூலில் பெரிய பின்னடைவு?

படத்தின் மீதான எதிர்பார்ப்புடன் ஒப்பிடும்போது, ‘மகுடம்’ திரைப்படத்தின் ஓப்பனிங் வசூல் குறைவாகவே இருந்ததாக பாக்ஸ் ஆபிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. முதல் நாளில் இந்தியாவில் சுமார் ரூ.60 லட்சம் வசூல் மட்டுமே கிடைத்ததாம். அடுத்தடுத்த நாட்களிலும் வசூலில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படாததால், வெளியான ஒரே வாரத்தில் இப்படத்திற்கான தியேட்டர்களின் எண்ணிக்கை மளமளவென குறைக்கப்பட்டது.

இணையத்தில் வெளியாகியுள்ள சில பாக்ஸ் ஆபிஸ் கணிப்புகளின்படி, இரண்டு வார திரையரங்கு ஓட்டத்தின் முடிவில் ‘மகுடம்’ படத்தின் உலகளாவிய வசூல் சுமார் ரூ.3 கோடி என்ற அளவில் இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் தயாரிப்பு நிறுவனம் இதுவரை படத்தின் இறுதி வசூல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை.

Related Articles

Related image1
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் vs மகுடம் பாக்ஸ் ஆபிஸ்... வசூலில் செஞ்சுரி அடித்த சூர்யா; கிளீன் போல்டு ஆன விஷால்...!
Related image2
Magudam Movie Day 1 Box Office : விஷாலின் மகுடம் முதல் நாளே வசூலை வாரிசுருட்டியதா? வாஷ் அவுட் ஆனதா?
34
விஷாலுக்கு இது பின்னடைவா?
Image Credit : X

விஷாலுக்கு இது பின்னடைவா?

விஷால் தொடர்ந்து ஆக்‌ஷன் படங்களில் நடித்து வருவதால், அவரது திரைப்படங்களுக்கு குறிப்பிட்ட அளவில் ரசிகர்களிடையே ஓப்பனிங் கிடைப்பது வழக்கம். அந்த வகையில் ‘மகுடம்’ படத்திற்கு ஏற்பட்ட குறைவான திரையரங்கு வரவேற்பு அவரது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதிலும், விஷால் முதன்முறையாக இயக்குநராக அறிமுகமான திரைப்படம் என்பதால், இப்படத்தின் ரிசல்ட் அவர்கள் எதிர்பார்த்தபடி கிடைக்கவில்லை.

முதல் படத்திலேயே வித்தியாசமான கதைக்களத்தை கையாள முயன்றிருந்த விஷால், அந்த கதையை இன்னும் நேர்த்தியான திரைக்கதையுடன் அணுகியிருந்தால் படத்தின் தாக்கம் அதிகமாக இருந்திருக்கும் என்பதே பல விமர்சகர்களின் கருத்தாக இருந்தது.

44
ஓடிடி ரிலீஸ் எப்போது?
Image Credit : X

ஓடிடி ரிலீஸ் எப்போது?

இதற்கிடையில் ‘மகுடம்’ படத்தின் ஓடிடி வெளியீடு தொடர்பான தகவலும் இணையத்தில் பரவி வருகிறது. அதன்படி, இத்திரைப்படம் செப்டம்பர் 11-ம் தேதி ஓடிடியில் வெளியாகும் என கூறப்படுகிறது. ஜீ5 தளத்தில் படம் வெளியாகலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், ஓடிடி வெளியீட்டு தேதி குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. எனவே, விஷால் ரசிகர்கள் தயாரிப்பு தரப்பின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக காத்திருக்கின்றனர். விரைவில் இதுகுறித்த அப்டேட் வெளியாகலாம்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
விஷால் (நடிகர்)
ஓடிடி

Latest Videos
Recommended Stories
Recommended image1
Toxic : ஜனநாயகன் ரெக்கார்டு காலி! பாக்ஸ் ஆபிஸில் 'டாக்ஸிக்' சுனாமி! முதல் நாள் எவ்வளவு வசூலிக்கும்?
Recommended image2
Toxic Review : யாஷின் ஆக்‌ஷன் விருந்து டேஸ்டா? வேஸ்டா? டாக்ஸிக் முழு விமர்சனம் இதோ
Recommended image3
Toxic Twitter Review: டாக்ஸிக் ட்விட்டர் விமர்சனம்: படம் எப்படி இருக்கு?
Related Stories
Recommended image1
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் vs மகுடம் பாக்ஸ் ஆபிஸ்... வசூலில் செஞ்சுரி அடித்த சூர்யா; கிளீன் போல்டு ஆன விஷால்...!
Recommended image2
Magudam Movie Day 1 Box Office : விஷாலின் மகுடம் முதல் நாளே வசூலை வாரிசுருட்டியதா? வாஷ் அவுட் ஆனதா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved