- Home
- Cinema
- Tamil Actor Vimal : 'மிரட்டலுக்கு அச்சியே பணம் தருவதாக கூறினேன்'..விமல் ஆடியோவால் அதிர்ந்து போன திரையுலகம்..
Tamil Actor Vimal : 'மிரட்டலுக்கு அச்சியே பணம் தருவதாக கூறினேன்'..விமல் ஆடியோவால் அதிர்ந்து போன திரையுலகம்..
Actor vimal send the audio to his film producers who complaint against him : 'என்னை மிரட்டி அந்த ஆடியோவை பேச வைத்தனர், அவர்களிடம் அடிமையாக இருந்த காலத்தில் அப்படி பேசி இருந்தேன்' என முந்தைய அவதூறு விடியோவிற்கு விளக்கம் அளித்துள்ளார் நடிகர் விமல்.

actor vimal
சிறிய வேடங்களில் ஆரம்பமான விமலின் நடிப்பு கடந்த 2009-ம் ஆண்டு பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான பசங்க படம் மூலம் ஹீரோவாக பரிமானித்தது. இதையடுத்து கேடி பில்லா கில்லாடி ரங்கா, களவாணி, கலகலப்பு, வாகை சூடவா எனஅடுத்தடுத்த படங்கள் மூலம் முன்னணி நாயகனாக பிரபலமானார் விமல்.
actor vimal
பட வாய்ப்புகள் குறைந்தாலும் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான விலங்கு என்கிற வெப் தொடர் ஓடிடி-யில் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றது.
actor vimal
இதற்கிடையே கமிஷனர் அலுவலகத்தில் விமல் மீது தயாரிப்பாளர் மோசடி புகார் கொடுத்துள்ளார். அதில் சென்னை பெரவள்ளூரைச் சேர்ந்த கோபி என்கிற சினிமா தயாரிப்பாளர் கொடுத்துள்ள புகார் மனுவில், 'மன்னர் வகையறா' படத்தை எடுத்தபோது தன்னிடம் 5 கோடி ரூபாய் கடனாக வாங்கினார். அதை திருப்பி தராமல் ஏமாற்றுவதாக குறிப்பிட்டுள்ளார்.
actor vimal
ஆனால், தான் எந்த பணமும் வாங்கவில்லை என நடிகர் விமல் மறுப்பு தெரிவித்துள்ளார். முன்னதாக தயாரிப்பாளர் சிங்காரவேலன் விமல் மீது பண மோசடி புகார் அளித்துள்ளார்.
actor vimal
இந்நிலையில் நேற்று தயாரிப்பாளர்கள் கோபி மற்றும் சிங்காரவேலனிடம் நடிகர் விமல் மன்னிப்பு கேட்டு வெளியிட்டதை போன்ற ஆடியோ ஒன்று வெளியாகி அதிர்ச்சியை அளித்தது.
actor vimal
அந்த வீடியோ குறித்து விளக்கம் அளித்துள்ளார். 6 மாதத்திற்குள் பணம் தந்து விடுவதாக அவர்கள் மிரட்டி கூற சொன்னதால் தான் கூறினேன். அந்த ஆடியோ 2019-ம் ஆண்டு தான் அவர்களுக்கு அடிமையாக இருந்த பொழுது எடுத்தத்து. என்று கூறி பகீர் கிளப்பியுள்ளார்.
actor vimal
மேலும் இதற்கும் மேல், அவர்கள் செய்யும் சூழ்ச்சிக்கு அடிபணிந்து போக மாட்டேன் என கூறியுள்ள விமல் சட்டப்படி அவர்கள் மேல் நடவடிக்கை எடுப்பேன் என்றும் புதிய ஆடியோவில் பேசியுள்ளார்.