- Home
- Cinema
- vijay car :இன்சூரன்ஸ் இல்லாத காரில் வந்து ஓட்டு போட்டாரா விஜய்? - போட்டோவை வைத்து வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்
vijay car :இன்சூரன்ஸ் இல்லாத காரில் வந்து ஓட்டு போட்டாரா விஜய்? - போட்டோவை வைத்து வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நடிகர் விஜய் சிவப்பு நிற காரில் வந்து வாக்களித்தார். இந்த கார் தான் தற்போது சர்ச்சையை கிளப்பி உள்ளது.

தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நேற்று நடைபெற்றது. நேற்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு, மாலை 5 மணியுடன் நிறைவு பெற்றது. மாலை 5 மணி முதல் 6 மணி வரை கொரோனா நோயாளிகள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.
நேற்று நடைபெற்ற தேர்தலில் திரைப்பிரபலங்கள் பெரும்பாலானோர் வாக்களிக்கவில்லை. அஜித், சிம்பு, சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, திரிஷா, ரஜினிகாந்த் ஆகியோர் ஓட்டு போடவில்லை. இவர்கள் வராவிட்டாலும், நேற்று முதல் ஆளாக காலை 7 மணிக்கே வந்து வாக்களித்தார் நடிகர் விஜய் (vijay).
சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார் நடிகர் விஜய். அவரது இல்லத்தில் இருந்தே ரசிகர்கள் புடை சூழ சிகப்பு நிற காரில் வந்த அவர், நீலாங்கரை வேல்ஸ் பள்ளியில் அமைந்துள்ள வாக்குச் சாவடியில் தனது வாக்கினை செலுத்திவிட்டு சென்றார்.
கடந்த ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலின்போது நடிகர் விஜய் சைக்கிளில் வந்து வாக்களித்தது பெரும் பேசுபொருளாக ஆன நிலையில், நேற்று நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நடிகர் விஜய் சிவப்பு நிற காரில் வந்து வாக்களித்தார். இந்த கார் தான் தற்போது சர்ச்சையை கிளப்பி உள்ளது.
ஏனெனில் நடிகர் விஜய் வாக்களிக்க வந்த காருக்கு இன்சுரன்ஸ் செலுத்தப்படவில்லை என்பதுதான் புது சர்ச்சையாக வெடித்துள்ளது. நடிகர் விஜய் வந்த காரின் எண்ணை நெட்டிசன்கள் சிலர் இணையத்தில் தேடி பார்த்துள்ளனர். அப்போது அந்த காரின் உரிமையாளர் ஜோசப் விஜய் என்றும் அந்த காருக்கான இன்சூரன்ஸ் கடந்த 2020-ம் ஆண்டு மே மாதமே காலாவதி ஆகிவிட்டதாக குறிப்பிடப்பட்டிருந்ததாம்.
இதுகுறித்த புகைப்படம் தான் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. கோடி கோடியாய் சம்பாதிப்பவர் இன்சூரன்ஸ் கூட கட்டுவதில்லையா என நெட்டிசன்கள் கிண்டலடிக்க, இன்ஸ்சூரன்ஸ் தகவல்கள் சில நேரம் அப்டேட் ஆகாமல் இருந்திருக்கும் என விஜய் ரசிகர்கள் பதிலுக்கு வாதிட்டு வருகின்றனர்.
இதையும் படியுங்கள்.... Tamilnadu Local Body election : வாக்களிக்க வந்த இடத்தில் மக்களிடம் மன்னிப்பு கேட்ட விஜய்... வைரலாகும் வீடியோ